ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

ரசிகர் மன்ற நிர்வாகிகளை சந்தித்த விஜய்... இது தான் காரணமா?

ரசிகர் மன்ற நிர்வாகிகளை சந்தித்த விஜய்... இது தான் காரணமா?

விஜய்

விஜய்

தமிழ் மற்றும் தெலுங்கில் வெளியாகும் வாரிசு படத்துடன் அஜித் குமாரின் துணிவு படமும் பாக்ஸ் ஆபிஸில் மோதுகிறது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

நடிகர் விஜய் தனது மக்கள் இயக்க நிர்வாகிகளை சென்னையில் சந்தித்தார். 

தனது ரசிகர்களை சந்தித்த ஒரு மாதத்திற்கு பிறகு, நடிகர் விஜய் இன்று சென்னையில் உள்ள அவரது பனையூர் அலுவலகத்தில் விஜய் மக்கள் இயக்க (விஎம்ஐ) ரசிகர் மன்ற உறுப்பினர்கள் மற்றும் நிர்வாகிகளை சந்தித்தார். இதில் அரியலூர், பெரம்பலூர் உள்ளிட்ட 3 மாவட்டங்களின் நிர்வாகிகள் கலந்துக் கொண்டனர். இதனால் விஜய்யின் அரசியல் பிரவேசம் குறித்து மீண்டும் வதந்திகள் கிளம்பியுள்ளன.

ரசிகர் மன்ற உறுப்பினர்களிடம் பேசிய விஜய் இயக்கத்தின் செயல்பாடுகள் குறித்து கேட்டறிந்தார். அதோடு சில வழிமுறைகளை பின்பற்றுமாறும் அவர்களை அறிவுறுத்தியதாக கூறப்படுகிறது. ரசிகர்களுடனான சந்திப்பிற்கு வந்த விஜய் கறுப்பு சட்டை மற்றும் பேண்ட் அணிந்திருந்தார்.

நவம்பர் மாதம் நாமக்கல், சேலம், காஞ்சிபுரம் மாவட்டங்களைச் சேர்ந்த ரசிகர் மன்ற உறுப்பினர்களை விஜய் சந்தித்தார். இந்த தொடர் சந்திப்புகள் தற்போது விஜய்யின் அரசியல் பிரவேசம் குறித்த வதந்திகளுக்கு தீனி போடும் விதத்தில் அமைந்துள்ளது.

படங்களைப் பொறுத்தவரை இயக்குனர் வம்ஷி பைடிப்பள்ளி இயக்கத்தில் தளபதி விஜய் நடித்துள்ள வாரிசு படம் பொங்கலுக்கு திரைக்கு வரவுள்ளது. தமிழ் மற்றும் தெலுங்கில் வெளியாகும் இப்படத்துடன் அஜித் குமாரின் துணிவு படமும் பாக்ஸ் ஆபிஸில் மோதுகிறது.

காசே தான் கடவுளடா... அஜித்தின் துணிவு படத்தின் செகண்ட் சிங்கிள்!

வாரிசுக்குப் பிறகு, தளபதி விஜய் முன்னதாக மாஸ்டர் படத்தில் பணியாற்றிய லோகேஷ் கனகராஜுடன் கைகோர்க்கிறார். இந்தப் படத்திற்கு தற்காலிகமாக தளபதி 67 என்று பெயரிடப்பட்டுள்ளது. இதன் படப்பிடிப்பு குறித்து ஜனவரி 2023-ல் அறிவிக்கப்படும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

First published:

Tags: Actor Thalapathy Vijay