• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • Vijay: வெற்றி பெற்ற பிரதிநிதிகளுடன் விஜய் சந்திப்பு - தீவிர அரசியலுக்கான துவக்கமா?

Vijay: வெற்றி பெற்ற பிரதிநிதிகளுடன் விஜய் சந்திப்பு - தீவிர அரசியலுக்கான துவக்கமா?

விஜய்

விஜய்

தீவிர அரசியலுக்கு ஆழம் பார்க்கும் முயற்சியில் இருக்கும் விஜய்க்கு, இந்த ஊரக உள்ளாட்சி தேர்தல் வெற்றி பெரும் உற்சாகத்தையும் நம்பிக்கையையும் கொடுத்திருக்கிறது.

  • Share this:
    உள்ளாட்சித் தேர்தலில் வெற்றிபெற்ற பிரதிநிதிகளுடன் விஜய் சந்தித்திருப்பது தீவிர அரசியலுக்கான துவக்கமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

    தமிழ் சினிமாவில் மாபெரும் ரசிகர் கூட்டத்தை தன் வசம் கட்டிப் போட்டுள்ள நடிகர்களில் நடிகர் விஜய் முக்கியமானவர். விஜய்க்கு ஒரு பிரச்சினை என்றால், களத்திற்கு வந்து ஆதரவு தர நாங்கள் தயார் என, நெய்வேலியில் ஒரு பெரும் கூட்டம் விஜய்க்கு ஆதரவாக நின்று பலரையும் ஆச்சரியப்படுத்தியது. விஜய் நடிக்கும் வேலையை மட்டுமே பார்த்தாலும் அவரை சுற்றி அரசியல் ரேகை அவ்வப்போது ஓடுவதை அவரால் கூட தடுக்க முடியவில்லை.

    ஆரம்பம் முதலே திமுகவுடன் நெருக்கமாக இருந்து வந்த விஜய், காவலன் திரைப்படத்தில் சந்தித்த பிரச்சனைகள் காரணமாக அதிமுகவிற்கு ஆதரவு கரம் நீட்டினார். தலைவா, சர்க்கார் என விஜய்யின் அடுத்தடுத்த திரைப்படங்களில், விஜய்க்கு எதிராக அதிமுக எடுத்த நிலைப்பாடு விஜய்யை சங்கடப்படுத்தியது. தொடர்ந்து மெர்சல் திரைப்படத்தில் பாஜகவுடன் நடிகர் அவருக்கு மோதல் ஏற்பட, அரசியல் களத்தில் விஜய் என்ற எதிர்பார்ப்பு அவரை சுற்றி உள்ள ரசிகர்கள் மத்தியில் எழத் தொடங்கியது.

    இந்நிலையில் ஊரக உள்ளாட்சி தேர்தலில் அரசியலுக்கு முன்னோட்டமாக அவரது மக்கள் மன்ற நிர்வாகிகள் 196 பேர் களமிறங்க அதில் 129 பேர் வெற்றிவாகை சூடினர். விஜய் மக்கள் மன்ற நிர்வாகிகள் மீது, மக்களுக்கு நம்பிக்கை உள்ளது என்ற எண்ணத்தை இந்த வெற்றி உணர்த்தியுள்ளது. தீவிர அரசியலுக்கு ஆழம் பார்க்கும் முயற்சியில் இருக்கும் விஜய்க்கு, இந்த ஊரக உள்ளாட்சி தேர்தல் வெற்றி பெரும் உற்சாகத்தையும் நம்பிக்கையையும் கொடுத்திருக்கிறது.

    அதன் வெளிப்பாடே தற்போதைய வெற்றிபெற்ற மன்ற தலைவர்களுடனான விஜய் சந்திப்பு. விஜய் மக்கள் மன்ற நிர்வாகிகள் வெற்றி பெற்றுள்ள விழுப்புரம், கள்ளக்குறிச்சி உள்ளிட்ட மாவட்டங்கள் நடிகர் விஜயகாந்த் கோலோச்சி வந்த மாவட்டங்களாக பார்க்கப்படுகிறது.

    Thalapathy Vijay meeting with local body election winners, Thalapathy Vijay fans, vijay makkal iyakkam, local body election, Thalapathy Vijay Beast release date, விஜய் ரசிகர்கள், உள்ளாட்சித் தேர்தல், விஜய் மக்கள் இயக்கம், beast, beast shooting, beast shooting in chennai, beast second schedule, beast pooja hegde, beast song shoot, pooja hegde thalapathy vijay, beast film, beast movie, beast vijay, beast first look, thalapathy vijay, vijay beast, nelson dilip kumar, விஜய், பீஸ்ட், பீஸ்ட் படப்பிடிப்பு, நெல்சன் திலீப்குமார், விஜய் படங்கள், பீஸ்ட் போஸ்டர்,  பீஸ்ட் திரைப்படம், பீஸ்ட் விஜய், விஜய் பூஜா ஹெக்டே, பீஸ்ட் பாடல் படப்பிடிப்பு, beast release date, beast release, பீஸ்ட் ரிலீஸ், பீஸ்ட் திரைப்படம் வெளியீடு, vijay makkal iyakkam, vijay politics movie, actor vijay party flag, vijay makkal iyakkam wikipedia, அரசியலில் விஜய், விஜய் அரசியல்
    தேர்தலில் வெற்றி பெற்ற நிர்வாகிகளை சந்தித்த விஜய்


    இந்நிலையில் விஜயகாந்திற்கு இருந்த இந்தப் பகுதி மக்களின் செல்வாக்கை, விஜய் அப்படியே அறுவடை செய்ய வாய்ப்புள்ளது, என்பது இந்த ஊரக உள்ளாட்சி தேர்தல் மூலம் தெரியவந்துள்ளது. அடுத்த சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் நான்கரை ஆண்டுகள் உள்ள நிலையில், அது வரையிலும் தொடர்ந்து அரசியல் குறித்த நம்பிக்கையை விஜய் வளர்த்துக்கொள்ள, இந்த வெற்றி உதவும் என கூறுகிறார்கள் அரசியல் விமர்சகர்கள்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Shalini C
    First published: