• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • மறைந்த நடிகர் விவேக் குடும்பத்தினருக்கு விஜய் ஆறுதல்

மறைந்த நடிகர் விவேக் குடும்பத்தினருக்கு விஜய் ஆறுதல்

விஜய் - விவேக்

விஜய் - விவேக்

தளபதி 65 படத்தின் படப்பிடிப்பை முடித்துவிட்டு ஜார்ஜியாவில் இருந்து சென்னை திரும்பிய நடிகர் விஜய் விவேக் வீட்டுக்குச் சென்று துக்கம் விசாரித்துள்ளார்.

  • Share this:
தமிழ் திரையுலகின் சின்னக்கலைவாணராக வலம் வந்த விவேக் ஏப்ரல் 16-ம் தேதி காலை திடீரென்று ஏற்பட்ட மாரடைப்பால் வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு மருத்துவர்கள் அவருக்குத் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். ஆனால் அடுத்தநாள் (ஏப்ரல் 17) காலை 5 மணியளவில் சிகிச்சை பலனின்றி விவேக் காலமானார். அவருக்கு வயது 59.

விவேக்கின் மறைவு திரைத்துறையினரையும், ரசிகர்களையும் சோகத்தில் ஆழ்த்தியது. திரையுலகினர் பலரும் அவரது மறைவுக்கு நேரில் வந்து அஞ்சலி செலுத்தினர். நடிகர் விஜய் ஜார்ஜியாவில் தளபதி 65 படத்தின் படப்பிடிப்பில் இருந்ததால் விவேக்கின் இறுதி அஞ்சலிக்கு அவரால் வரமுடியவில்லை. இந்நிலையில் நேற்று ஜார்ஜியாவில் இருந்து சென்னை திரும்பிய நடிகர் விஜய் இன்று விவேக்கின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து துக்கம் விசாரித்து இரங்கல் தெரிவித்துள்ளார். இத்தகவலை அவரது மக்கள் தொடர்பாளர் ரியாஸ் அகமது உறுதிப்படுத்தியுள்ளார்.

மாஸ்டர் படத்தை அடுத்து நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் நடிக்கிறார் விஜய். இந்தப் படத்தில் அவருக்கு ஜோடியாக நடிகை பூஜா ஹெக்டே நடிக்கிறார். தற்காலிகமாக ‘தளபதி 65’ என்று அழைக்கப்படும் இந்தப் படத்தில் மலையாள நடிகை அபர்ணா தாஸ் முக்கிய கேரக்டரில் நடிக்கிறார். மேலும் முதல்முறையாக விடிவி கணேஷ் இந்தப் படத்தில் விஜய் உடன் இணைந்துள்ளார் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகும் இந்தப் படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார்.

இந்தப் படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு ஜார்ஜியாவில் தொடங்கி நடைபெற்று வந்த நிலையில் அங்கு தொடர்ச்சியாக 18 நாட்கள் ஷூட்டிங் பணிகளில் ஈடுபட்ட படக்குழு நேற்று சென்னை திரும்பியதும் குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Sheik Hanifah
First published: