• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • Master: பிரபல பட பட்டியலில் இந்தியாவிலேயே முதலிடம் பிடித்த விஜய்யின் ’மாஸ்டர்’!

Master: பிரபல பட பட்டியலில் இந்தியாவிலேயே முதலிடம் பிடித்த விஜய்யின் ’மாஸ்டர்’!

மாஸ்டர்

மாஸ்டர்

பிரபல திரைப்பட தரவுகள் இணையதளமான ஐ.எம்.டி.பி-யின் 2021-ம் ஆண்டு பிரபல இந்தியப் படங்களின் வரிசையில் விஜய் நடித்த மாஸ்டர் முதலிடத்தைப் பிடித்துள்ளது.

  • Share this:
    பிரபல திரைப்பட தரவுகள் இணையதளமான ஐ.எம்.டி.பி-யின் 2021-ம் ஆண்டு பிரபல இந்தியப் படங்களின் வரிசையில் விஜய் நடித்த மாஸ்டர் முதலிடத்தைப் பிடித்துள்ளது.

    இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்த படம் ‘மாஸ்டர்’. இதில் விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன், ஆண்ட்ரியா, சாந்தனு, கெளரி கிஷன், அர்ஜுன் தாஸ் உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். எக்ஸ்பி ஃபிலிம் கிரியேட்டர்ஸ் தயாரித்த இந்தப் படத்திற்கு அனிருத் இசையமைத்திருந்தார்.

    இதன் படபிடிப்பு முடிந்து வெளியாகும் சமயத்தில், கொரோனா பரவல் அதிகமானதால், இதன் வெளியீடு தள்ளிப் போனது. அதோடு திரையரங்குகளும் மூடப்பட்டது. இதையடுத்து நவம்பர் 10-ம் தேதி முதல் 50 சதவீத பார்வையாளர்களுடன் திரையரங்குகள் செயல்பட கடந்த வருடம் தமிழக அரசு அனுமதியளித்தது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    கொரோனா லக்டவுனுக்குப் பிறகு வெளியான உச்ச நட்சத்திரத்தின் முதல் படம் என்ற பெருமையை பொங்கலுக்கு வெளியான மாஸ்டர் பெற்றது. 50 சதவீத இருக்கை அமல்படுத்தப்பட்டதால், காட்சிகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டது. தமிழகம் மட்டுமல்லாமல், அண்டை மாநிலங்கள் மற்றும் இந்திய அளவில் சினிமா ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த மாஸ்டர் வசூலிலும் சாதனை படைத்தது.

    இந்நிலையில் பிரபல திரைப்பட தரவுகள் இணையதளமான ஐ.எம்.டி.பி-யின் 2021-ம் ஆண்டு பிரபல இந்தியப் படங்களின் வரிசையில் தளபதி விஜய் நடித்த மாஸ்டர் முதலிடத்தைப் பிடித்துள்ளது. அடுத்தடுத்த இடங்கள் முறையே, 2. ஆஸ்பிரன்ட்ஸ் (வெப் சீரிஸ்), 3. தி வைட் டைகர், 4. திரிஷ்யம் 2, 5. நவம்பர் ஸ்டோரி, 6. கர்ணன், 7. வக்கீல் ஸாப், 8. மஹாராணி (வெப் சீரிஸ்), 9. கிராக், 10. தி கிரேட் இண்டியன் கிச்சன் ஆகியவைகள் பெற்றிருக்கின்றன.

    இதனை இணையத்தில் கொண்டாடி வருகிறார்கள் விஜய் ரசிகர்கள்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Shalini C
    First published: