மீசை, தாடியில்லாமல் விஜய் - வைரலாகும் மாஸ்டர் லுக்!

மீசை, தாடியில்லாமல் விஜய் - வைரலாகும் மாஸ்டர் லுக்!
மாஸ்டர்
  • Share this:
நடிகர் விஜய்யின் புதிய புகைப்படம் வெளியாகி சமூகவலைதளங்களில் வைரலாகியுள்ளது.

பிகில் படத்தை அடுத்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாஸ்டர் படத்தில் நடித்து வருகிறார் விஜய். இந்தப் படத்தில் விஜய்க்கு ஜோடியாக மாளவிகா மோகனனும், வில்லனாக விஜய்சேதுபதியும் நடிக்கின்றனர். இவர்களுடன் நடிகர் சாந்தனு, ஆன்ட்ரியா, அர்ஜுன் தாஸ், கவுரி கிஷன் உள்ளிட்டோரும் நடித்துள்ளனர்.

எக்ஸ்பி ஃபிலிம் கிரியேட்டர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார். படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வரும் நிலையில் விஜய் - மாளவிகா மோகனன் இருக்கும் புகைப்படம் ஒன்று சமூகவலைதளங்களில் வெளியாகியுள்ளது.


அதில் நடிகர் விஜய் மீசை தாடியை ட்ரிம் செய்து புதிய தோற்றத்தில் மாறியிருக்கிறார். முன்னதாக இந்தப் படத்தில் நடிகர் விஜய் மீசையின்றி சில காட்சிகளில் நடித்திருப்பதாக தகவல்கள் வெளியானது. அதை உறுதிப்படுத்தும் விதமாக இந்தப் புகைப்படம் அமைந்துள்ளது.





படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் செகண்ட் லுக் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ள நிலையில், ஏப்ரல் மாதம் 9-ம் தேதி படத்தைத் திரைக்கு கொண்டு வர திட்டமிட்டுள்ளது படக்குழு.

மேலும் படிக்க: ஆபாச ட்வீட்கள்... அஜித் இதை குறித்து வைத்துக் கொள்ளுங்கள்... யுத்தத்தில் கஸ்தூரி...!
First published: January 20, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்
corona virus btn
corona virus btn
Loading