‘மாஸ்டர்’ டீசர் அப்டேட் கொடுத்த லோகேஷ் கனகராஜ் - மகிழ்ச்சியில் ரசிகர்கள்!

‘மாஸ்டர்’ டீசர் அப்டேட் கொடுத்த லோகேஷ் கனகராஜ் - மகிழ்ச்சியில் ரசிகர்கள்!
விஜய்
  • Share this:
மாஸ்டர் பட டீசர் குறித்த ரசிகர்களின் கேள்விக்கு இயக்குநர் லோகேஷ் கனகராஜ் பதிலளித்துள்ளார்.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் படம் மாஸ்டர். இந்தப் படத்தில் கல்லூரி பேராசிரியர் கேரக்டரில் நடிக்கும் விஜய்க்கு ஜோடியாக மாளவிகா மோகனனும், வில்லனாக விஜய் சேதுபதியும் நடிக்கின்றனர்.

இவர்களுடன் நடிகர் சாந்தனு, ஆன்ட்ரியா, கௌரி கிஷன் உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். படத்தின் 3 போஸ்டர்களை அடுத்தடுத்து வெளியிட்ட படக்குழு, கடந்த பிப்ரவரி 14-ம் தேதியன்று விஜய் சொந்தக் குரலில் பாடிய குட்டி ஸ்டோரி பாடலை வெளியிட்டது. இந்தப் பாடல் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது.


இந்நிலையில் சமீபத்தில் லோகேஷ் கனகராஜ் கலந்து கொண்ட நிகழ்ச்சியில் மாஸ்டர் திரைப்படத்தின் டீசர் குறித்த கேள்வியை ரசிகர்கள் முன்வைத்துள்ளனர். அதற்கு பதிலளித்த லோகேஷ் கனகராஜ், டீசருக்கான பணிகள் நடைபெற்றுக் கொண்டிருப்பதாகவும், விரைவில் டீசர் குறித்த அறிவிப்பு வெளியாகும் என்றும் கூறியுள்ளார்.

மேலும் மாஸ்டர் திரைப்படம் முடிவடைய இன்னும் கிட்டத்தட்ட 40 நாட்கள் தான் இருக்கிறது என்றும் லோகேஷ் கனகராஜ் தெரிவித்துள்ளார். இதனிடையே படத்தின் போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகளும் ஒருபுறமும் மும்முரமாக நடைபெற்று வருவதும் குறிப்பிடத்தக்கது.



மேலும் படிக்க: மாஸ்டர் சொன்ன குட்டி ஸ்டோரிக்கு 5-ம் இடம்...! முதல் மூன்று இடங்கள் யாருக்குத் தெரியுமா?
First published: February 29, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading