Home /News /entertainment /

உலக அரங்கில் சாதனைப் படைத்த விஜய்யின் மாஸ்டர்!

உலக அரங்கில் சாதனைப் படைத்த விஜய்யின் மாஸ்டர்!

மாஸ்டர் விஜய்

மாஸ்டர் விஜய்

லாக்டவுனுக்குப் பிறகு வெளியான இப்படம் பிளாக்பஸ்டர் வெற்றியைப் பெற்று, ரசிகர்களை திரையரங்குகளை நோக்கி படையெடுக்க வைத்தது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
    2021-ஆம் ஆண்டில் ட்விட்டர் ட்ரெண்டிங் பட்டியலில் முதலிடத்தைப் பிடித்த ‘மாஸ்டர்’ தற்போது மீண்டும் உலக அரங்கில் சாதனை படைத்துள்ளது. அதன்படி 2020-ம் ஆண்டில் அதிகம் கேட்கப்பட்ட தமிழ் ஆல்பம் ‘மாஸ்டர்’ என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    நேற்று அதாவது டிசம்பர் 22-ம் தேதி, இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்தர் தனது ட்விட்டர் பக்கத்தில் இந்த செய்தியை அறிவித்ததோடு, இந்த சாதனைக்காக நடிகர் விஜய், மாஸ்டர் பட இயக்குநர் லோகேஷ் கனகராஜ் மற்றும் ரசிகர்களுக்கு தனது நன்றியைத் தெரிவித்தார்.

    படம் வெளியாவதற்கு முன்பே ‘மாஸ்டர்’ படத்தின் பாடல்கள் வெளியாகின. இந்த பாடல்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று ரசிகர்களை கொண்டாட வைத்தது. படத்தில் ‘வாத்தி கம்மிங்’, ‘குட்டி ஸ்டோரி’, ‘வாத்தி ரெய்டு’, ‘க்விட் பண்ணுடா’, ‘மாஸ்டர் தி பிளாஸ்டர்’ ஆகிய பாடல்கள் இடம் பெற்றன.



    மேலும் படிக்க - யூ-ட்யூப், விளம்பரம் இப்போது நயன்தாரா படம் - ஆச்சர்யப்படுத்தும் ரித்து ராக்ஸ் ரித்விக்!

    மாஸ்டர் திரைப்படம் 2021 பொங்கலை முன்னிட்டு வெளியிடப்பட்டது. லாக்டவுனுக்குப் பிறகு வெளியான இப்படம் பிளாக்பஸ்டர் வெற்றியைப் பெற்று, ரசிகர்களை திரையரங்குகளை நோக்கி படையெடுக்க வைத்தது. மாஸ்டரில் நடிகர்கள் விஜய், விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன், அர்ஜுன் தாஸ் மற்றும் ஆண்ட்ரியா ஜெர்மியா முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். அதோடு தமிழகத்தில் 2021-ம் அண்டு அதிகம் வசூல் செய்த படங்களில் மாஸ்டர் முதலிடம் பிடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Shalini C
    First published:

    Tags: Actor Thalapathy Vijay, Anirudh

    அடுத்த செய்தி