CINEMA THALAPATHY VIJAY MASTER BREAKS BAAHUBALI 2 BOX OFFICE COLLECTION RECORD IN TAMIL NADU SCS
Master: பாகுபலி 2 வசூல் சாதனையை முறியடித்த மாஸ்டர்!
விஜய்
உலகளவில் 245 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்திருக்கும் மாஸ்டர் படம் தமிழகத்தில் 145 கோடி வரை வசூல் செய்திருப்பதாக பாக்ஸ் ஆபீஸ் வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.
விஜய்யின் மாஸ்டர் படம் தமிழகத்தில் பாகுபலி 2 படத்தின் வசூல் சாதனையை முறியடித்துள்ளது.
பொங்கல் விருந்தாக திரைக்கு வந்த விஜய்யின் மாஸ்டர் படம் பாக்ஸ் ஆபீசில் பல வசூல் சாதனைகளை முறியடித்து வருகிறது. திரையரங்கில் வெளியான இரண்டே வாரத்தில் அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியாகி இருந்தாலும் பல இடங்களில் இப்படம் 50 நாட்கள் கடந்தும் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.
உலகளவில் 245 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்திருக்கும் மாஸ்டர் படம் தமிழகத்தில் 145 கோடி வரை வசூல் செய்திருப்பதாக பாக்ஸ் ஆபீஸ் வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். இதில் விநியோகஸ்தர்களுக்கான ஷேராக மட்டுமே 60 கோடிக்கும் அதிகமாக இப்படம் கொடுத்துள்ளது. இதன் மூலம் 2017-ல் வெளியான பாகுபலி 2 படத்தின் வசூல் சாதனையை முறியடித்து தமிழகத்தில் அதிக ஷேர் கொடுத்த படம் எனும் புதிய சாதனையை மாஸ்டர் படைத்துள்ளது.
அதேசமயம் தமிழகத்தில் அதிக வசூல் செய்த படம் எனும் சாதனையை பாகுபலி 2 திரைப்படமே தற்போது வரை தக்கவைத்துள்ளது. உலகம் முழுக்க 1500 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்த பாகுபலி 2 திரைப்படம் தமிழகத்தில் 155 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்தது.
இதற்கு அடுத்த இடத்தில் விஜய்யின் பிகில் படம் 150 கோடியும் மாஸ்டர் படம் 145 கோடியும் வசூல் செய்துள்ளது. இதன்மூலம் தமிழகத்தில் அதிகம் வசூல் செய்த டாப் மூன்று படங்களில் விஜய்யின் இரண்டு படங்கள் இருப்பதால் அவருடைய ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.