• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • பிக் பாஸ் நிகழ்ச்சியில் ‘மாஸ்டர்’ பிரபலம்?

பிக் பாஸ் நிகழ்ச்சியில் ‘மாஸ்டர்’ பிரபலம்?

மாஸ்டர்

மாஸ்டர்

வரும் அக்டோபர் 3-ம் தேதி பிக் பாஸ் நிகழ்ச்சி தனது 5-ம் சீசனை துவங்கவிருக்கிறது.

  • Share this:
    விஜய் டிவி-யில் ஒளிபரப்பாகவுள்ள பிக் பாஸ் நிகழ்ச்சியில் மாஸ்டர் பட நடிகர் கலந்துக் கொள்வதாக செய்திகள் வெளியாகியிருக்கின்றன.

    தமிழில் பிக் பாஸ் நிகழ்ச்சியின் நான்காவது சீசன் இந்த ஆண்டின் தொடக்கத்தில் முடிவடைந்தது. இதன் வெற்றியாளராக நடிகர் ஆரியை டைட்டிலை வென்றார். இதற்கிடையே கொரோனா தொற்று காரணமாக, மலையாளம் மற்றும் கன்னட மொழியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் இறுதிப் போட்டி சமீபத்தில் தான் முடிவடைந்தது.

    தற்போது, பிக் பாஸ் 5-ம் சீசனுக்கு ரசிகர்கள் தயாராகி வரும் நிலையில், இதனையும் நடிகர் கமல்ஹாசனே தொகுத்து வழங்குகிறார். இதன் ப்ரோமோக்கள் வெளியாகி ரசிகர்களிடம் நிகழ்ச்சி குறித்த எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியிருக்கிறது.

    அதோடு இந்த முறை பிக் பாஸ் நிகழ்ச்சியில் யாரெல்லாம் கலந்துக் கொள்ளப் போகிறார்கள் என்ற ரசிகர்களின் கேள்விகளுக்கு வரும் ஞாயிற்றுக்கிழமை பதில் கிடைத்துவிடும். ஆம் வரும் அக்டோபர் 3-ம் தேதி பிக் பாஸ் நிகழ்ச்சி தனது 5-ம் சீசனை துவங்கவிருக்கிறது.




    இந்நிலையில் மாஸ்டர் படத்தில் நடிகர் விஜய்யின் மாணவராக நடித்த சிபி சந்திரன் பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராகக் கலந்துக் கொள்வதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Shalini C
    First published: