Master 50th Day: மாற்று திறனாளி குழந்தைகளுக்கு இலவச டிக்கெட் - மாஸ்டர் 50-வது நாள் கொண்டாட்டம்!

Master 50th Day: மாற்று திறனாளி குழந்தைகளுக்கு இலவச டிக்கெட் - மாஸ்டர் 50-வது நாள் கொண்டாட்டம்!

விஜய்

திரையரங்கில் வெளியாகிய 16 நாட்களில் ஓடிடி-யில் வெளியிடப்பட்டாலும், தியேட்டர்களில் கூட்டம் குறையாமல் இருந்தது.

  • Share this:
    நடிகர் விஜய் நடித்த ’மாஸ்டர்’ திரைப்படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடி 50-வது நாளைக் கடந்துள்ளது. இதனை தமிழகத்திலுள்ள முக்கிய திரையரங்கம் ஒன்று சிறப்பாக கொண்டாடுகிறது.

    இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கிய ‘மாஸ்டர்’ திரைப்படம் பொங்கலுக்கு வெளியானது. இதில் விஜய், விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன், சாந்தனு, ஆண்ட்ரியா உள்ளிட்டோர் நடித்திருந்தனர். படத்தின் ஆடியோ வெளியீடு நடந்த சமயத்தில் தான் இந்தியாவில் கொரோனா தொற்று தலைதூக்க ஆரம்பித்தது. அதனால் கடந்த ஏப்ரலில் வெளியாக வேண்டிய மாஸ்டர் இந்த வருட பொங்கலுக்கு வெளியானது.

    Cook With Comali: ’குக் வித் கோமாளிக்கு வராததுக்கு இதான் காரணம்’ – பவித்ரா விளக்கம்



    கொரோனா பரவலுக்கு பிறகு திரையரங்கில் வெளியான முதல் பெரிய படம் என்பதால் ரசிகர்களிடம் இப்படம் பெரும் வரவேற்பை பெற்றது. திரையரங்கில் வெளியாகிய 16 நாட்களில் ஓடிடி-யில் வெளியிடப்பட்டாலும், தியேட்டர்களில் கூட்டம் குறையாமல் இருந்தது. உலகம் முழுவதும் நல்ல வரவேற்பைப் பெற்ற மாஸ்டர் வசூலிலும் முன்னணி இடத்தைப் பெற்றது. குறிப்பாக தமிழகத்தில் பாகுபலி 2 படத்தின் வசூலை பின்னுக்குத் தள்ளியிருப்பதாக, பாக்ஸ் ஆபிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

    இந்நிலையில் இன்றோடு மாஸ்டர் திரைப்படம் வெளியாகி 50-வது நாளை கடந்துள்ளது. மாஸ்டர் 50-வது நாளை கொண்டாடுவதற்காக, திருநெல்வேலியில் உள்ள ராம் முத்துராம் சினிமாஸ் திரையரங்கு மாற்றுத்திறனாளி குழந்தைகள் 200 பேருக்கு இலவச டிக்கெட்டுகளைக் கொடுப்பதாக தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Shalini C
    First published: