ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

தளபதி விஜய் மக்கள் இயக்கத்தின் அதிகாரப்பூர்வ இணையதள பக்கங்கள் துவக்க விழா…

தளபதி விஜய் மக்கள் இயக்கத்தின் அதிகாரப்பூர்வ இணையதள பக்கங்கள் துவக்க விழா…

விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள்

விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள்

கடந்த உள்ளாட்சி தேர்தலின்போது தளபதி விஜய் மக்கள் இயக்கத்தை சேர்ந்த நிர்வாகிகள் தேர்தலில் போட்டியிட்டனர்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

தளபதி விஜய் மக்கள் இயக்கத்தின் அதிகாரப்பூர்வ இணையதள பக்கங்கள் துவக்க விழா இன்று கோலாகலமாக நடைபெற்றது.

தமிழ் சினிமாவின் முன்னணி கதாநாயகனாக விஜய் இருந்து வருகிறார். அவரது ரசிகர்கள் விஜய் மக்கள் இயக்கம் என்ற பெயரில் ஒருங்கிணைக்கப்பட்டு பல்வேறு மக்கள் நலப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில் ஒவ்வொரு மாவட்டம், மாநிலம், வெளிநாடுகளில் உள்ள தளபதி விஜய் மக்கள் இயக்கத்திற்கு அதிகாரப்பூர்வ இணையதள, சமூக வலைதள பக்கங்கள் தொடங்கப்பட்டு வருகிறது.

இதையொட்டி, இதற்கான துவக்கவிழா சென்னையில் உள்ள தலைமை அலுவலகத்தில் இன்று நடைபெற்றது. விழாவைத் தொடர்ந்து மக்கள் இயக்க நிர்வாகிகளுக்கு சிக்கன் பிரியாணியுடன் மதிய உணவு வழங்கப்பட்டது.

கடந்த உள்ளாட்சி தேர்தலின்போது தளபதி விஜய் மக்கள் இயக்கத்தை சேர்ந்த நிர்வாகிகள் தேர்தலில் போட்டியிட்டனர். இதனால் விஜய் அரசியல் கட்சி தொடங்குவாரா என்ற எதிர்பார்ப்பும் காணப்படுகிறது.

Published by:Musthak
First published:

Tags: Vijay makkal iyakkam