Home /News /entertainment /

பிரியாணி விருந்துடன் நடந்த விஜய் மக்கள் இயக்க ஆலோசனைக் கூட்டம்

பிரியாணி விருந்துடன் நடந்த விஜய் மக்கள் இயக்க ஆலோசனைக் கூட்டம்

விஜய் மக்கள் இயக்கம்

விஜய் மக்கள் இயக்கம்

தளபதி மக்கள் இயக்க தலைமை அலுவலகத்தில் தகவல் தொழில்நுட்ப அணி தொடர்பான ஆலோசனைக்கூட்டம் நடந்தது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India
    தளபதி மக்கள் இயக்க தலைமை அலுவலகத்தில் தகவல் தொழில்நுட்ப அணி தொடர்பான ஆலோசனைக்கூட்டம் நடந்தது.

    தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக திகழ்பவர் நடிகர் விஜய். அவரின் 66-வது படமான ’வாரிசு’ திரைப்படத்தை வம்ஷி பைடிப்பள்ளி இயக்குகிறார். படத்தில் கதாநாயகியாக ராஷ்மிகா மந்தன்னா நடிக்கிறார். தமன் இசையமைக்கும் இப்படத்தில் சரத்குமார், ஷாம், பிரபு, ஸ்ரீகாந்த், எஸ்.ஜே. சூர்யா, பிரகாஷ் ராஜ், ஜெயசுதா, யோகி பாபு, சங்கீதா கிரிஷ் மற்றும் சம்யுக்தா சண்முகநாதன் ஆகியோர் நடித்து வருகின்றனர்.

    பெரும் ரசிகர் பட்டாளத்தைக் கொண்டுள்ள விஜய் நற்பணிகளுக்கு பெயர் போனவர். அவரது விஜய் மக்கள் இயக்கத்தினர் ரத்ததானம், அன்னதானம், மாணவர்களுக்கு இலவச நோட்டு புத்தகங்கள், மருத்துவ முகாம் என மக்களுக்கு பல நற்பணிகளை செய்து வருகின்றனர்.

    பிரியாணி விருந்துடன் நடந்த விஜய் மக்கள் இயக்க ஆலோசனைக் கூட்டம்
    விஜய் மக்கள் இயக்க ஆலோசனைக் கூட்டம்


    இந்நிலையில் அகில இந்திய தளபதி மக்கள் இயக்க தலைமை அலுவலகத்தில் தகவல் தொழில்நுட்ப அணி தொடர்பான ஆலோசனைக்கூட்டம் நடந்தது. மக்கள் இயக்க பொதுச்செயலாளர் திரு.புஸ்ஸி N.ஆனந்து Ex.MLA அவர்கள் தலைமையில் இந்த கூட்டம் நடைபெற்றது.

    ரஜினிகாந்த் நடிக்கும் ஜெயிலர் படப்பிடிப்பு தொடங்கியது!

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    இதில் அனைத்து மாவட்ட தகவல் தொழில்நுட்ப நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் மக்கள் இயக்கத்தின் பல்வேறு ஆக்கப்பூர்வமான செயல்பாடுகள் குறித்து விவாதிக்கப்பட்டது. நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவருக்கும் மதிய உணவாக பிரியாணி வழங்கப்பட்டது.
    Published by:Shalini C
    First published:

    Tags: Actor Thalapathy Vijay

    அடுத்த செய்தி