ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

Thalapathy Vijay: அமெரிக்க ரசிகரை நெகிழச் செய்த விஜய்!

Thalapathy Vijay: அமெரிக்க ரசிகரை நெகிழச் செய்த விஜய்!

ரசிகருடன் விஜய்

ரசிகருடன் விஜய்

முதலில் எடுத்தப் படத்தில், துரதிர்ஷ்டவசமாக நான் கண்களை மூடிவிட்டேன். அதனால் அவரே மீண்டும் ஒன்றை எடுக்கச் சொன்னார்.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  அமெரிக்க ரசிகர் ஒருவர் விஜய்யுடன் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் கவனம் ஈர்த்துள்ளது. 

  தளபதி விஜய்யின் அடுத்த படமான 'வாரிசு' பொங்கலுக்கு வெளியாக உள்ளது. இப்படத்திற்கான படப்பிடிப்பை முடித்த விஜய், சிறு விடுமுறைக்காக துபாய் சென்றுள்ளார். விமான நிலையத்தில் எடுக்கப்பட்ட அவரின் படங்களும் மற்றும் வீடியோக்களும் சில நாட்களுக்கு முன்பு வைரலானது. சுவாரஸ்யமாக, துபாயில் விடுமுறைக்கு சென்றதாக கூறப்பட்ட நடிகர் விஜய், தற்போது அமெரிக்காவில் தனது விடுமுறையை கழித்து வருகிறார். அப்போது ரசிகர் ஒருவர் அவருடன் புகைப்படங்கள் எடுத்துள்ளார்.

  இதனால் மகிழ்ச்சியடைந்த ரசிகர், அந்த தருணத்தை சமூக ஊடகங்களில் பகிர்ந்து கொண்டார். ”சமீபத்தில் தளபதி விஜய் சாரை சந்தித்தேன். அவர் மிகவும் அருமையான மனிதர். ஏறக்குறைய 10 நிமிடங்கள் என்னுடன் செலவிட்டார். என்னைப் பற்றியும் என் வேலையைப் பற்றியும் ஆர்வத்துடன் அறிந்துக் கொண்டார். உங்கள் வாழ்க்கைக்கு ஆல் தி பெஸ்ட் என்றார். முதலில் எடுத்தப் படத்தில், துரதிர்ஷ்டவசமாக நான் கண்களை மூடிவிட்டேன். அதனால் அவரே மீண்டும் ஒன்றை எடுக்கச் சொன்னார்” என்று அதில் குறிப்பிட்டிருந்தார்.

  அர்னாவ்வுடனான பிரச்னைக்குப் பிறகு கர்ப்ப கால படத்தைப் பகிர்ந்த திவ்யா ஸ்ரீதர்

  நவம்பர் கடைசி வாரத்தில் விஜய் சென்னை திரும்புவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதோடு அவர் தனது 'தளபதி 67' படத்திற்கான வேலையைத் தொடங்க தயாராகி வருவது குறிப்பிடத்தக்கது.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  Published by:Shalini C
  First published:

  Tags: Actor Thalapathy Vijay