Home /News /entertainment /

Vijay: 100 ரூபாய் பிரியாணி பிரியரான விஜய் - ஆச்சர்யமடைந்த ரசிகர்கள்!

Vijay: 100 ரூபாய் பிரியாணி பிரியரான விஜய் - ஆச்சர்யமடைந்த ரசிகர்கள்!

விஜய்

விஜய்

இதை சாப்பிடுறதுக்கா நம்மள வர சொன்னாருன்னு நெனச்சேன். இனி நீங்க சப்பிட கூப்பிட்டா சப்பிட்டு தான் சார் வருவேன்

    ரோட்டுக்கடையில் விற்கும் 100 ரூபாய் பிரியாணி டேஸ்ட் மிகுந்ததாக இருக்கும் என விஜய் தனது பேட்டியில் தெரிவித்திருக்கிறார்.

    நடிகர் விஜய்யின் 65-வது படமான ’பீஸ்ட்’ திரைப்படத்தை நெல்சன் திலீப் குமார் இயக்கியுள்ளார். படத்தில் கதாநாயகியாக பூஜா ஹெக்டே நடித்துள்ளார். அனிருத் இசையமைக்கும் இப்படத்தில் அபர்ணா தாஸ், யோகிபாபு உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். விஜய்யின் ’சர்கார்’ படத்தைத் தொடர்ந்து இந்தப் படத்தையும் சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ளது. படத்தின் ட்ரைலர் மற்றும் பாடல்கள் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.

    பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ள பீஸ்ட் திரைப்படம் நாளை திரையரங்குகளில் வெளியாகிறது. இதன் புரொமோஷன் நிகழ்ச்சியாக கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு சன் டிவி-யில் விஜய்யின் நேர்க்காணல் ஒளிபரப்பானது. பீஸ்ட் படத்தின் இயக்குநர் நெல்சன் இதனை தொகுத்து வழங்கினார்.

    திரை தீ பிடிக்கும்... ஒருத்தன் வந்தா படை நடுங்கும்... பீஸ்ட் 3-வது பாடல்!

    அதில் பேசிய விஜய் பல்வேறு விஷயங்களை ரசிகர்களுடன் பகிர்ந்துக் கொண்டார். அப்போது விஜய்யை நேர்க்காணல் எடுத்த நெல்சன். ‘ஒருநாள் அப்படியே பேசிட்டு சாப்பிடலாம்ன்னு எங்களை கூப்பிட்டுருந்தீங்க. நானும் விஜய் சார் கூட டின்னர் சப்பிடப்போறோம்ங்குற எதிர்பார்ப்புல வந்தேன். நான் ஒரு உணவு பிரியர் அதனால ஒரு ராஜபோக விருந்து இருக்குன்னு மைண்ட் செட்ல இருந்தேன். அங்க வந்து பேசுனோம். அப்றம் சாப்பிடுற டைம் வந்துச்சு. ‘சாப்டலாமாப்பா’ன்னு கேட்டுட்டு கீழ இருந்து ஒரு பிளாஸ்டிக் கவரை எடுத்தீங்க. அதுக்குள்ள 100 ரூபாய் பிரியாணி. நான் அப்படியே ஷாக் ஆகிட்டேன்.



    Beast: முன்பதிவிலேயே ரஜினிகாந்தின் அண்ணாத்த படத்தை பின்னுக்கு தள்ளிய விஜய்யின் பீஸ்ட்!

    இதை சாப்பிடுறதுக்கா நம்மள வர சொன்னாருன்னு நெனச்சேன். இனி நீங்க சப்பிட கூப்பிட்டா சப்பிட்டு தான் சார் வருவேன்’ என ஜாலியாக விஜய்யை கலாய்த்தார். அதற்கு ’அது நல்லாருக்கும்பா’ என்றார் விஜய். ஏதாவது பொருள் வாங்கினால் கூட 10 முறைக்கு மேல் பார்த்து பார்த்து தான் கொடுக்கும் பணத்திற்கு அது ஒர்த்தாக இருக்குமா என யோசித்து தான், விஜய் வாங்குவதாகக் குறிப்பிட்ட நெல்சன், பீஸ்ட் படப்பிடிப்பில் அவருடன் தொடர்ந்து பழகும் போது விஜய்யின் எளிமையைக் கண்டு வியந்து போனதாக தெரிவித்தார்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Shalini C
    First published:

    Tags: Actor Thalapathy Vijay, Beast

    அடுத்த செய்தி