ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

Thalapathy 67: தளபதி 67 ஃபோட்டோஷூட், ப்ரோமோ ஷூட் குறித்த அட்டகாச அப்டேட்!

Thalapathy 67: தளபதி 67 ஃபோட்டோஷூட், ப்ரோமோ ஷூட் குறித்த அட்டகாச அப்டேட்!

விஜய் - லோகேஷ் கனகராஜ்

விஜய் - லோகேஷ் கனகராஜ்

தளபதி 67 பட அறிவிப்பு டீசர் படப்பிடிப்பிற்காக பிரசாத் லேப்பில் இரண்டு செட் அமைக்கப்பட்டுள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

நடிகர் விஜய் மற்றும் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இரண்டாவது முறையாக இணையும் தளபதி 67 படத்தின் ஃபோட்டோஷூட் மற்றும் ப்ரோமோ ஷூட் குறித்த அட்டகாச தகவல்கள் வெளியாகியுள்ளன.

விஜய் மற்றும் லோகேஷ் கனகராஜ் இருவரும் விஜய்யின் 67 படத்திற்காக மீண்டும் இணைய உள்ளதாக கடந்த பல மாதங்களாக செய்திகள் வெளியாகின. இந்தப் படத்திற்கு தற்காலிகமாக 'தளபதி 67' என்று பெயரிடப்பட்டது. தமிழ் சினிமாவில் அதிக பொருட்செலவில் எடுக்கப்படும் படமாக இப்படம் உருவாகவிருப்பதாகவும் கூறப்பட்டது. ஆனாலும் 'தளபதி 67' அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படாததால், எப்போது அது நிகழும் என எதிர்பார்ப்புடன் காத்திருந்தனர் ரசிகர்கள்.

இந்நிலையில் இன்று தளபதி 67 படத்தின் பூஜை சென்னை, ஏவிஎம் ஸ்டூடியோவில் நடைப்பெற்றுள்ளது. இதில் ஃபோன்கள் அனுமதிக்கப்படவில்லை. ஆகையால் படங்கள் தயாரிப்பு தரப்பில் இருந்து மட்டுமே வெளியிடப்படும் எனத் தெரிகிறது. தளபதி 67 பட அறிவிப்பு டீசர் படப்பிடிப்பிற்காக பிரசாத் லேப்பில் இரண்டு செட் அமைக்கப்பட்டுள்ளது. அதில் ஒன்று ரெட் டோனில் இருக்கும்படி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நாளை முதல் 4 நாட்களுக்கு இந்த படப்பிடிப்பு நடைப்பெறுகிறது.

விஜய் - லோகேஷ் கனகராஜின் தளபதி 67 பூஜையுடன் தொடக்கம்!

அதாவது நாளை 06.12.2022 தளபதி 67 படத்தின் ஃபோட்டோஷூட்டும், 07.12.2022 முதல் 09.12.2022 வரை ப்ரோமோ ஷூட்டும் நடைப்பெறவிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மாஸ்டர் படத்திற்குப் பிறகு மீண்டும் விஜய் - லோகேஷ் கூட்டணி இணைவதால், மிகுந்த எதிர்பார்ப்பில் இருக்கிறார்கள் ரசிகர்கள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

First published:

Tags: Actor Thalapathy Vijay, Lokesh Kanagaraj