ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

அறிவிப்புக்கு முன்பே பல கோடி வியாபாரத்தில் விஜய் - லோகேஷ் கனகராஜ் படம்!

அறிவிப்புக்கு முன்பே பல கோடி வியாபாரத்தில் விஜய் - லோகேஷ் கனகராஜ் படம்!

லோகேஷ் கனகராஜ் - விஜய்

லோகேஷ் கனகராஜ் - விஜய்

ஒரு திரைப்படத்தின் அறிவிப்புக்கு முன்னரே இந்த அளவுக்கு வியாபாரம் நடைபெறுவது இதுவே முதல் முறை.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

விஜய் நடிக்கவுள்ள அவரின் 67 வது படத்தின் டிஜிட்டல் மற்றும் ஆடியோ உரிமை பெரும் தொகைக்கு விற்பனையாகவுள்ளது. 

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லலித்குமார் தயாரிப்பில் விஜய் நடிக்கவுள்ள படத்திற்கான முதற்கட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன. இருந்தாலும் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை. ஆனால் அந்தப் படத்தின் உரிமைகளை பெறுவதற்கான போட்டி இப்போதே தொடங்கிவிட்டது.

விஜய் - லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவாகவுள்ள அந்தப் படத்தின், திரையரங்கு வெளியீட்டுக்கு பிந்தைய டிஜிட்டல் உரிமையை பெற நெட்பிளிக்ஸ் நிறுவனம் முயற்சிக்கிக்கிறது. அதுவும் 125 கோடி ரூபாய் வழங்கவும் அந்த நிறுவனம் தயாராகவுள்ளது. அதேபோல் சோனி நிறுவனம் படத்தின் ஆடியோ உரிமையை பெற திட்டமிட்டுள்ளது. அந்த நிறுவனம் 14 கோடி ரூபாய் கொடுத்து ஆடியோ உரிமத்தைப் பெற பேச்சு வார்த்தை நடத்தி வருகிறது எனவும் தகவல் கிடைத்துள்ளது.

2023 பொங்கலுக்கு பிரமாண்டமாக வெளியாகும் விஜய்யின் வாரிசு!

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

ஒரு திரைப்படத்தின் அறிவிப்புக்கு முன்னரே இந்த அளவுக்கு வியாபாரம் நடைபெறுவது இதுவே முதல் முறை. விஜய் - லோகேஷ் கனகராஜ் இணையும் அந்தப் படம் Pan Indian படமாக உருவாகவுள்ளது.

Published by:Shalini C
First published:

Tags: Actor Vijay, Lokesh Kanagaraj