Home /News /entertainment /

Kutti Story: யூ-ட்யூபில் 110 மில்லியன் பார்வைகளைக் கடந்த விஜய்யின் குட்டி ஸ்டோரி பாடல்!

Kutti Story: யூ-ட்யூபில் 110 மில்லியன் பார்வைகளைக் கடந்த விஜய்யின் குட்டி ஸ்டோரி பாடல்!

தளபதி விஜய்

தளபதி விஜய்

'குட்டி ஸ்டோரி’, ‘வாத்தி கம்மிங்’, ‘வாத்தி ரெய்டு’ என மாஸ்டர் படத்தின் பாடல்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India
    மாஸ்டர் படத்தில் நடிகர் விஜய் பாடிய குட்டி ஸ்டோரி பாடல் யூ-ட்யூபில் 110 மில்லியன் பார்வைகளைக் கடந்துள்ளது. 

    இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கிய ‘மாஸ்டர்’ திரைப்படம் 2021 பொங்கலுக்கு வெளியானது. இதில் விஜய், விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன், சாந்தனு, ஆண்ட்ரியா உள்ளிட்டோர் நடித்திருந்தனர். எக்ஸ்பி பிலிம் கிரியேட்டர்ஸ் சார்பில் சேவியர் பிரிட்டோ தயாரித்திருந்த இந்தப் படத்திற்கு அனிருத் இசையமைத்திருந்தார்.

    கொரோனா பரவலுக்கு பிறகு திரையரங்கில் வெளியான முதல் பெரிய படம் என்பதால் ரசிகர்களிடம் இப்படம் பெரும் வரவேற்பை பெற்றது. திரையரங்கில் வெளியாகிய 16 நாட்களில் ஓடிடி-யில் வெளியிடப்பட்டாலும், தியேட்டர்களில் கூட்டம் குறையாமல் இருந்தது. உலகம் முழுவதும் நல்ல வரவேற்பைப் பெற்ற மாஸ்டர் வசூலிலும் முன்னணி இடத்தைப் பெற்றது.

    'குட்டி ஸ்டோரி’, ‘வாத்தி கம்மிங்’, ‘வாத்தி ரெய்டு’ என மாஸ்டர் படத்தின் பாடல்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. குறிப்பாக இந்தப் படத்தில் இடம்பெற்றிருந்த குட்டி ஸ்டோரி பாடலை இயக்குநரும், பாடலாசிரியருமான அருண்ராஜா காமராஜ் எழுத, விஜய் பாடியிருந்தார். ஆரம்பத்தில் இருந்தே தனது படங்களில் பாடுவதை வழக்கமாக வைத்திருக்கும் விஜய் இடையில் சில படங்களில் பாடவில்லை.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    கடவுள் எனக்காக டன்சோவில் அனுப்பிய பரிசு நீ... மனைவி மகாலட்சுமியை புகழ்ந்த ரவீந்தர்!



    பின்னர் துப்பாக்கி படத்தில் இடம்பெற்ற கூகுள் கூகுள் பாடல் ரசிகர்களிடம் மாபெரும் வரவேற்பைப் பெற்றதால், மீண்டும் பாடத் தொடங்கினார். அந்த வகையில் மாஸ்டர் படத்தில் விஜய் பாடிய குட்டி ஸ்டோரி பாடல் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது. தற்போது இந்தப் பாடல் யூ-ட்யூபில் 110 மில்லியன் பார்வைகளைக் கடந்துள்ளது.
    Published by:Shalini C
    First published:

    Tags: Master, Thalapathy vijay

    அடுத்த செய்தி