ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

வாரிசு தெலுங்கு புரொமோஷனில் விஜய்? தில் ராஜூ கொடுத்த வாக்குறுதி!

வாரிசு தெலுங்கு புரொமோஷனில் விஜய்? தில் ராஜூ கொடுத்த வாக்குறுதி!

வாரிசு விஜய்

வாரிசு விஜய்

தெலுங்கில் நேரடிப் படங்களுக்கு இடையேயான மோதலை தவிர்க்கும் வகையில் வாரிசு படத்தின் தெலுங்கு பதிப்பு ஜனவரி 14ஆம் தேதி வெளியாகிறது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

விஜய்யின் அடுத்த படமான 'வாரிசு' பொங்கல் விழாவை முன்னிட்டு நாளை வெளியாகிறது. இந்தப் படத்தின் தெலுங்கு பதிப்பிற்கு 'வாரசுடு' என்று பெயரிடப்பட்டுள்ளது. தற்போது இந்தப் படத்தின் தயாரிப்பாளர் தில் ராஜு ரசிகர்களுக்கு வாக்குறுதி ஒன்றை அளித்துள்ளார்.

வாரிசு படத்தின் தெலுங்கு பதிப்பை விளம்பரப்படுத்த நடிகர் விஜய் ஹைதராபாத் வருவார் என்று அவர் கூறியுள்ளார். ப்ரோமோஷன் நிகழ்ச்சிகளுக்காக தளபதி விஜய் ஹைதராபாத் வரவுள்ளதால் ரசிகர்கள் மகிழ்ச்சியில் ஆழ்ந்துள்ளனர். ஜனவரி 11-ம் தேதி அங்கு படம் வெளியாகினால், விஜய் வருவது கஷ்டமாக இருந்திருக்கும். ஆனால் இப்படம் ஜனவரி 14ஆம் தேதி திரைக்கு வருவதால், தெலுங்கு ப்ரோமோஷனுக்கு விஜய்யை அழைத்து வருகிறேன் என்றார் தில் ராஜு.

தெலுங்கில் நேரடிப் படங்களுக்கு இடையேயான மோதலை தவிர்க்கும் வகையில் வாரிசு படத்தின் தெலுங்கு பதிப்பு ஜனவரி 14ஆம் தேதி வெளியாகிறது. வாரிசு படத்தில் விஜய்யுடன் இணைந்து பிரபு, ராஷ்மிகா, சங்கீதா, பிரகாஷ் ராஜ், ஷ்யாம் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். இதனை வம்ஷி பைடிப்பள்ளி இயக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

First published:

Tags: Thalapathy vijay, Varisu