நடிகர் விஜய் - இயக்குநர் முருகதாஸ் கூட்டணியில் மாபெரும் வெற்றிப் பெற்ற ‘துப்பாக்கி’ படத்தின் இரண்டாம் பாகத்தில் விஜய் நடிக்க மாட்டார் எனவும், அவருக்கு பதில் வேறொரு மூத்த நடிகர் நடிப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
விஜய்யின் திரைவாழ்க்கையில் முக்கியமான படம் துப்பாக்கி. விஜய்யைப் போலவே முருகதாஸுக்கும் இந்தப் படம் முக்கியமானதாக அமைந்தது. பெரும் வெற்றியை எதிர்பார்த்திருந்த விஜய்க்கு கை கொடுத்தது. முருகதாஸ் இயக்கிய ரமணா, கஜினியைவிட கச்சிதமான கதையும், திரைக்கதையும், பாடல்களும், சண்டைக் காட்சிகளும் படத்தை பிரமாண்ட வெற்றியடைய செய்தது.
அதனைத் தொடர்ந்து கத்தி,
சர்க்கார் படங்களை முருகதாஸ் இயக்கினார். இந்த இரு படங்களும் கதைத் திருட்டு சர்ச்சையில் சிக்கின. சர்க்கார் படப்பிரச்சனை நீதிமன்றம் வரைச் சென்று முருகதாஸின் இமேஜை பெருமளவு டேமேஜ் செய்தது. முருகதாஸின் கடைசிப் படம்
தர்பாரும் சரியாகப் போகவில்லை. வணிக ரீதியாக ஓகே என்றாலும், படைப்பு ரீதியாக படம் யாரையும் கவரவில்லை.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில்
நியூஸ்18 தமிழ் இணையதளத்தை
இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்..
செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
இந்நிலையில் தற்போது துப்பாக்கி 2 படத்தை இயக்க ஏ.ஆர்.முருகதாஸ் தயாராகி வருவதாக சில தினங்களுக்கு முன்பு செய்திகள் வெளியாகின. இதில் விஜய் நடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவருக்கு பதிலாக
கமல்ஹாசன் நடிக்க உள்ளதாக சமூக வலைத்தளங்களில் தகவல் பரவி வருகிறது. ஆனால் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை.
எது உண்மை? பொறுத்திருந்து பார்ப்போம்.
உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.