Home /News /entertainment /

Thalapathy Vijay: நீண்ட இடைவெளிக்குப் பிறகு டிவி-யில் தோன்றும் விஜய்... எதிர்பார்ப்பில் ரசிகர்கள்!

Thalapathy Vijay: நீண்ட இடைவெளிக்குப் பிறகு டிவி-யில் தோன்றும் விஜய்... எதிர்பார்ப்பில் ரசிகர்கள்!

விஜய்

விஜய்

ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்த பீஸ்ட் திரைப்படம் வரும் எப்ரல் 13-ம் தேதி வெளியாகும் என சமீபத்தில் அறிவிக்கப்பட்டது.

    நடிகர் விஜய் நீண்ட இடைவெளிக்குப் பிறகு டிவி-யில் தோன்றவிருக்கிறாராம். பீஸ்ட் படத்தின் ரிலீஸை முன்னிட்டு சன் டிவி நிகழ்ச்சியின் மூலம் அவர் ரசிகர்களை சந்திக்கவிருப்பதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

    நடிகர் விஜய்யின் 65-வது படமான ’பீஸ்ட்’ திரைப்படத்தை நெல்சன் திலீப் குமார் இயக்கியுள்ளார். படத்தில் கதாநாயகியாக பூஜா ஹெக்டே நடித்துள்ளார். அனிருத் இசையமைக்கும் இப்படத்தில் அபர்ணா தாஸ், யோகிபாபு உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். விஜய்யின் ’சர்கார்’ படத்தைத் தொடர்ந்து இந்தப் படத்தையும் சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ளது.

    தளபதி 65 படம் என்றழைக்கப்பட்டு வந்த பீஸ்ட் படத்தின் டைட்டிலும், ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரும் கடந்த ஜூன் மாதம் விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு வெளியிடப்பட்டது. இதையடுத்து பீஸ்ட் படத்தின் 100-வது நாள் படப்பிடிப்பில் எடுக்கப்பட்ட புகைப்படம் மற்றும் இறுதி நாள் படப்பிடிப்பில் எடுக்கப்பட்ட புகைப்படம் ஆகியவை வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலானது. தொடர்ந்து பீஸ்ட் படத்தின் வேறு அப்டேட்டுகளுக்காக காத்திருந்தனர் ரசிகர்கள்.

    தொடர்ந்து காதலர் தினத்தை முன்னிட்டு பீஸ்ட் படத்தின் முதல் பாடலான ‘அரபிக் குத்து’ லிரிக் வீடியோ வெளியானது. அதன் ப்ரோமோவில் இயக்குநர் நெல்சன், இசையமைப்பாளர் அனிருத் மற்றும் நடிகரும், அரபிக் குத்து பாடலாசிரியரான சிவகார்த்திகேயனும் இடம் பெற்றிருந்தனர். அவர்களுடன் ஃபோனில் பேசியிருந்தார் விஜய். இது ரசிகர்களுக்கு மிகுந்த உற்சாகத்தைக் கொடுத்தது. பின்னர் பீஸ்ட் படத்தின் இரண்டாவது சிங்கிளான ஜாலியோ ஜிம்கானா என்ற பாடல் வெளியானது. விஜய் பாடியிருந்த இந்தப் பாடல் இணையத்தில் படு வைரலானது.

    விஜய்யை விட நான் பெரிய நடிகன் இல்லை - வியக்க வைத்த கே.ஜி.எஃப் 2 யாஷ்!

    இந்நிலையில் ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்த பீஸ்ட் திரைப்படம் வரும் எப்ரல் 13-ம் தேதி வெளியாகும் என சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. முன்னதாக படத்தின் ஆடியோ வெளியீட்டு நிகழ்ச்சி நடக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அது நடைப்பெறவில்லை. அதனால் விஜய்யின் மேடைப் பேச்சை மிஸ் பண்ணுவதாக சோகமானார்கள் அவரது ரசிகர்கள்.

    Dune Oscar 2022: 6 ஆஸ்கர் விருதுகளை அள்ளிய ட்யூன்!

    தற்போது அவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி ஒன்று வெளியாகியிருக்கிறது. அதாவது பீஸ்ட் படத்தின் வெளியீட்டை முன்னிட்டு சன் டிவி நிகழ்ச்சியில் கலந்துக் கொள்கிறாராம் விஜய். படக்குழுவினருடன் அவர் கலந்துக் கொள்ளும் அந்நிகழ்ச்சி ஏப்ரல் 10-ம் தேதி ஒளிபரப்பாகவிருக்கிறதாம்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Shalini C
    First published:

    Tags: Beast, Thalapathy vijay

    அடுத்த செய்தி