ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

விஜய்யின் அடுத்த தெலுங்குப் படம்... இயக்குநர் யார் தெரியுமா?

விஜய்யின் அடுத்த தெலுங்குப் படம்... இயக்குநர் யார் தெரியுமா?

விஜய்

விஜய்

இந்தப் படம் 2023-ஆம் ஆண்டின் இறுதியில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

    நடிகர் விஜய் தனது அடுத்த தெலுங்குப் படத்திற்கான பேச்சு வார்த்தையில் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

    தமிழில் முன்னணி நடிகராக வலம் வரும் நடிகர் விஜய், தெலுங்கு மாநிலங்களில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறார். மிகப்பெரிய மார்க்கெட் உள்ள தெலுங்கில் தனது இடத்தை தக்க வைக்க, நேரடி தெலுங்குப் படங்களில் நடிக்கும் திட்டத்தில் இருக்கிறார். வம்ஷி பைடிப்பள்ளி இயக்கத்தில் விஜய் தனது முதல் நேரடி தெலுங்கு படமான வாரிசு படப்பிடிப்பை கிட்டத்தட்ட முடித்துவிட்டார்.

    இப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் 2023 பொங்கலுக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே முன்னணி தயாரிப்பு நிறுவனமான மைத்ரி மூவி மேக்கர்ஸ் நீண்ட நாட்களுக்கு முன்பே விஜய்க்கு அட்வான்ஸ் தந்துள்ளது. சமீபத்தில் விஜய் மற்றும் அட்லீ சந்திப்புக்கு இந்த தயாரிப்பு நிறுவனம் தான் ஏற்பாடு செய்தது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    இரட்டை குழந்தைகளுக்கு பாலூட்டும் படத்தைப் பகிர்ந்த சின்மயி!

    அட்லியும் படத்திற்காக பெரும் அட்வான்ஸைப் பெற்றுள்ளார். அவர் ஜவான் படத்தின் வேலையை முடித்த பிறகு ஸ்கிரிப்ட் வேலை செய்வார். இந்தப் படம் 2023-ஆம் ஆண்டின் இறுதியில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தப் படம் பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும். இதற்கிடையே அடுத்ததாக லோகேஷ் கனகராஜ் படத்தின் படப்பிடிப்பை தொடங்கவுள்ளார் விஜய். இப்படம் அடுத்த ஆண்டு வெளியாகவுள்ளது.

    Published by:Shalini C
    First published:

    Tags: Actor Thalapathy Vijay