Home /News /entertainment /

வாரிசு படப்பிடிப்பிற்காக ஹைதராபாத் சென்ற நடிகர் விஜய்!

வாரிசு படப்பிடிப்பிற்காக ஹைதராபாத் சென்ற நடிகர் விஜய்!

வாரிசு விஜய்

வாரிசு விஜய்

ஹைதராபாத் அன்னபூர்ணா ஸ்டுடியோவில் நடைபெறும் வாரிசு படத்தின் நான்காம் கட்ட படப்பிடிப்பில் நடிகர் விஜய் பங்கேற்றுள்ளார்.

வாரிசு திரைப்படத்தின் 4-ம் கட்ட படப்பிடிப்பிற்காக நடிகர் விஜய் ஹைதராபாத் சென்றுள்ளார்.

வம்சி இயக்கும் வாரிசு திரைப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. சென்னை. ஹைதராபாத் ஆகிய இடங்களில் இதன் படப்பிடிப்புகள் நடந்து வருகின்றன. அந்த வகையில் கடந்த 25ஆம் தேதி மூன்றாம் கட்டப்பட பிடிப்பு சென்னையில் நிறைவடைந்தது.

இதைத்தொடர்ந்து தற்போது நான்காம் கட்ட படப்பிடிப்பை ஹைதராபாத்தில் உள்ள அன்னபூர்ணா ஸ்டுடியோவில் தொடங்கியுள்ளனர். அதில் பங்கேற்பதற்காக நடிகர் விஜய் ஹைதராபாத் சென்றுள்ளார். அங்கு 25ஆம் தேதி வரை படப்பிடிப்பு நடைபெறுகிறது. அதற்கு பிறகு சென்னை திரும்பும் விஜய், மீண்டும் ஆகஸ்ட் மாதம் முதல் வாரம் சென்னையில் தொடங்கும் ஐந்தாம் கட்ட படப்பிடிப்பில் கலந்து கொள்வார் என தகவல் வெளியாகி உள்ளது.

கம்பீரமாக விக்ரம்... வரவேற்பைப் பெறும் பொன்னியின் செல்வன் ஆதித்ய கரிகாலன் லுக்!

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

விஜய் - வம்சி கூட்டணியில் உருவாகும் இந்த திரைப்படத்தில் ராஷ்மிகா மந்தனா நாயகியாக நடிக்கிறார்.  அவரை தவிர பிரகாஷ்ராஜ், சரத்குமார், யோகி பாபு, ஷாம் உள்ளிட்டவர்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு வாரிசு திரைப்படம் வெளியாவது குறிப்பிடத்தக்கது.
Published by:Shalini C
First published:

Tags: Actor Thalapathy Vijay

அடுத்த செய்தி