Thalapathy 65: ஜார்ஜியாவில் தளபதி விஜய் - ஒரே நாளில் சன் பிக்சர்ஸ் டபுள் ட்ரீட்!

Thalapathy 65: ஜார்ஜியாவில் தளபதி விஜய் - ஒரே நாளில் சன் பிக்சர்ஸ் டபுள் ட்ரீட்!

தளபதி 65 படப்பிடிப்பு தளம்

விஜய் நடிக்கும் ‘தளபதி 65’ படத்தின் படப்பிடிப்பு தற்போது ஜார்ஜியாவில் தொடங்கியுள்ளது. படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்ட படம், சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

  • Share this:
    விஜய் நடிக்கும் ‘தளபதி 65’ படத்தின் படப்பிடிப்பு தற்போது ஜார்ஜியாவில் தொடங்கியுள்ளது. படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்ட படம், சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

    ‘தளபதி 65’ படத்தின் பணிகள் ஜார்ஜியாவில் தற்போது தொடங்கியிருக்கிறது. இப்படத்தை கோலமாவு கோகிலா, டாக்டர் ஆகியப் படங்களை இயக்கிய நெல்சன் திலீப் குமார் இயக்குகிறார். படத்தில் கதாநாயகியாக பூஜா ஹெக்டே நடிக்கிறார். அனிருத் இசையமைக்கும் இப்படத்தில் அபர்ணா தாஸ், யோகிபாபு உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளனர்.

    சமீபத்தில் இந்த படத்தின் பூஜை சென்னையில் நடந்தது. இதையடுத்து, தளபதி 65 படத்தின் முதல்கட்ட ஷூட்டிங்கை காஷ்மீரில் நடத்த படக்குழு திட்டமிட்டது. ஆனால் தற்போதைய சூழலில் அங்கு படப்பிடிப்பை நடத்துவது சாத்தியமில்லை என்பதால், காஷ்மீர் போன்று உள்ள ஜார்ஜியாவில் தளபதி 65 ஷூட்டிங்கை தொடங்க முடிவு செய்யப்பட்டது.



    ஏப்ரல் 6-ம் தேதி நடந்த தமிழக சட்டமன்ற தேர்தலில் சைக்கிளில் வந்து வாக்களித்த நடிகர் விஜய், அன்று இணையத்தில் ட்ரெண்டிங் ஆனார். பெட்ரோல், டீசல் விலை உயர்வை தான் அவர் மறைமுகமாக சாடுகிறார் என்றெல்லாம் பேசப்பட்டது. இந்நிலையில் வாக்களித்த கையோடு, தளபதி 65 படத்திற்காக ஜார்ஜியா புறப்பட்டு சென்றார்.

    அங்கு படக்குழுவினரும், அங்குள்ள தமிழர்களும் விஜய்க்கு உற்சாக வரவேற்பை அளித்தனர். தற்போது படப்பிடிப்பு தளத்தில் விஜய்யுடன் இயக்குனர் நெல்சன் நிற்கும் புகைப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது. முன்னதாக சூர்யா நடிக்கும், சூர்யா 40 படத்தின் படத்தையும் தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் வெளியிட்டிருந்தது. இப்படி ஒரே நாளில் விஜய் மற்றும் சூர்யா ரசிகர்களுக்கு தயாரிப்பு நிறுவனம், ஆனந்த அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது!



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Shalini C
    First published: