Home /News /entertainment /

Vijay: ஏர்போர்ட் கியூ-வில் விஜய்... வைரலாகும் படம்!

Vijay: ஏர்போர்ட் கியூ-வில் விஜய்... வைரலாகும் படம்!

விஜய்

விஜய்

கடந்த 3 மாதங்களாக வாரிசு படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத் செட்டில் நடந்து வந்த நிலையில், இன்று முதல் அதன் அடுத்தக் கட்ட படப்பிடிப்பு விசாகப்பட்டினத்தில் தொடங்குகிறது.

    நடிகர் விஜய் ஏர்போர்ட் கியூ-வில் நிற்கும் புகைப்படமும், ஏர்போர்ட்டில் நடந்து செல்லும் வீடியோவும் ட்விட்டரில் வைரலாகி வருகின்றன. 

    நடிகர் விஜய் தற்போது அவரது 66-வது படத்தில் நடித்து வருகிறார். வம்ஷி பைடிபள்ளி இயக்கத்தில் உருவாகும் இப்படத்திற்கு 'வாரிசு' என்று பெயரிடப்பட்டுள்ளது. தில் ராஜு தயாரிக்கும் இப்படம் தமிழ்-தெலுங்கு என இருமொழிகளில் உருவாகிறது.

    விஜய்க்கு ஜோடியாக ரஷ்மிகா மந்தனா நாயகியாக நடிக்கும் வாரிசு படத்தில், பிரகாஷ் ராஜ் மற்றும் சரத் குமார் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள். அவர்களுடன் பிரபு, ஜெயசுதா, ஷாம், தெலுங்கு நடிகர் ஸ்ரீகாந்த் மற்றும் யோகி பாபு ஆகியோர் துணை வேடங்களில் நடிக்கின்றனர். குடும்ப உறவுகளை மையமாக வைத்து உருவாக்கப்பட்ட கதையான வாரிசு, முழுக்க முழுக்க ஆக்‌ஷன், மாஸ் மற்றும் நல்ல பாடல்கள் அடங்கிய ஃபீல் குட் படமாக இருக்கும் எனக் கூறப்படுகிறது.



    Varisu: சென்னை வேண்டாம்... முடிவை மாற்றிய வாரிசு குழுவினர்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    கடந்த 3 மாதங்களாக வாரிசு படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத் செட்டில் நடந்து வந்த நிலையில், இன்று முதல் அதன் அடுத்தக் கட்ட படப்பிடிப்பு விசாகப்பட்டினத்தில் தொடங்குகிறது. இதற்காக விசாகப்பட்டினம் செல்ல விமானநிலையம் வந்த வந்த விஜய்யின் வீடியோவும், அவர் கியூ-வில் நிற்கும் படங்களும் ட்விட்டரில் வைரலாகி வருகின்றன.
    Published by:Shalini C
    First published:

    Tags: Actor Thalapathy Vijay

    அடுத்த செய்தி