Thalapathy 65: தளபதி 65 படப்பிடிப்புக்காக ஜார்ஜியா பறக்கும் விஜய்!

Thalapathy 65: தளபதி 65 படப்பிடிப்புக்காக ஜார்ஜியா பறக்கும் விஜய்!

தளபதி 65

தளபதி 65 படத்தின் படப்பிடிப்புக்காக நடிகர் விஜய் ஜார்ஜியா செல்லவிருப்பதாக செய்திகள் வெளியாகியிருக்கின்றன.

  • Share this:
    தளபதி 65 படத்தின் படப்பிடிப்புக்காக நடிகர் விஜய் ஜார்ஜியா செல்லவிருப்பதாக செய்திகள் வெளியாகியிருக்கின்றன.

    விஜய் கடைசியாக 'மாஸ்டர்' திரைப்படத்தில் நடித்திருந்தார். லோகேஷ் கனகராஜ் இயக்கியிருந்த இந்தப் படம் பொங்கலுக்கு வெளியாகி ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றது. கொரோனாவுக்கு பிறகு தியேட்டரில் வெளியான முதல் பெரிய படம் என்ற பெருமையைப் பெற்ற மாஸ்டர் படம் பாக்ஸ் ஆபிஸில் தெறி ஹிட்டானது.

    இதற்கிடையே கோலமாவு கோகிலா, டாக்டர் ஆகியப் படங்களின் இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இயக்கும் அடுத்தப் படத்தில் விஜய் நடிக்கும் அறிவிப்பு வெளியானது. கடந்த வாரம் சென்னையில் இப்படத்தின் பூஜை நடைப்பெற்றது. இந்நிலையில் 'தளபதி 65' படத்தின் முதல் அட்டவணைக்காக விஜய் இன்று இரவு ஜார்ஜியா செல்வதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. படக்குழு ஜார்ஜியாவில் தளபதி 65 படத்திற்கான பணிகளைத் தொடங்கவுள்ளது, அதோடு ஐரோப்பாவில் ஒரு குறுகிய கால அட்டவணைக்கும் திட்டமிட்டிருக்கிறார்கள்.

    தளபதி 65 படக்குழு ஜார்ஜியாவில் பத்து நாட்கள் படப்பிடிப்பு நடத்துவார்கள். பின்னர் ஓய்வு எடுப்பார்கள். இதையடுத்து படத்தின் அடுத்த அட்டவணை மே மாதம் சென்னையில் நடக்கும். மற்ற பணிகளின் காரணமாக 'தளபதி 65' பூஜையில் கலந்துக் கொள்ளாத பூஜா ஹெக்டே, ஜார்ஜியா அட்டவணையில் இடம்பெறுவாரா இல்லையா என்பது குறித்து தெளிவாக தெரியவில்லை.

    படத்தில் நடிக்கும் வில்லன் யார் என்பது குறித்து இன்னும் அறிவிக்கப்படவில்லை.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Shalini C
    First published: