• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • Vijay: கேரளாவில் மக்களை திரையரங்கிற்கு வரவைக்க விஜய் படம் ரிலீஸ்...

Vijay: கேரளாவில் மக்களை திரையரங்கிற்கு வரவைக்க விஜய் படம் ரிலீஸ்...

விஜய்

விஜய்

கேரளாவில் விஜய் ரசிகர்கள் அதிகம் என்பதால், அங்கு விஜய்யின் கில்லி திரைப்படம் மீண்டும் திரையிடப்பட்டது.

  • Share this:
    திரையரங்கிற்கு ரசிகர்களை அழைத்து வரும் நோக்கில் கேரளாவில் நடிகர் விஜய்யின் கில்லி திரைப்படம் மறு வெளியீடு செய்யப்பட்டுள்ளது.

    கடந்த 2004-ஆம் ஆண்டு விஜய் நடிப்பில் வெளியான திரைப்படம் கில்லி. த்ரிஷா, பிரகாஷ் ராஜ் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்திருந்த இப்படம் விஜய்யின் சினிமா வாழ்க்கையில் முக்கியமான படமாக அமைந்தது. தெலுங்கில் நடிகர் மகேஷ்பாபு நடிப்பில் வெளியான ‘ஒக்கடு’ படத்தினை, தமிழில் கில்லி என ரீமேக் செய்திருந்தார் இயக்குநர் தரணி. இப்படத்தின் மூலம் விஜய்யின் ரசிகர் பட்டாளம் இன்னும் அதிகரித்தது. இப்போதும், பலரின் ஃபேவரிட் படமாக கில்லி இடம்பெற்றுள்ளது.

    இந்நிலையில் கேரளாவில் கொரோனா தொற்று காரணமாக தியேட்டர்கள் அனைத்தும் மூடப்பட்டு, சமீபத்தில் திறக்கப்பட்டது. ஆனாலும் கொரோனா அச்சத்தால் பெரிதளவில் பார்வையாளர்கள் திரையரங்கிற்கு வராமல் இருந்தனர். கேரளாவில் விஜய் ரசிகர்கள் அதிகம் என்பதால், அங்கு விஜய்யின் கில்லி திரைப்படம் மீண்டும் திரையிடப்பட்டது.







    இதையறிந்த ரசிகர்கள் கூட்டம் கூட்டமாக சென்று விஜய் படத்தினைப் பார்த்து மகிழ்ந்தனர். இதையடுத்து அந்தப் படங்கள் தற்போது ட்விட்டரில் வைரலாகி வருகிறது.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Shalini C
    First published: