ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

Varisu: வாரிசு கிளைமேக்ஸ் படப்பிடிப்புக்கு தயாராகும் விஜய்!

Varisu: வாரிசு கிளைமேக்ஸ் படப்பிடிப்புக்கு தயாராகும் விஜய்!

விஜய்

விஜய்

‘ரஞ்சிதமே’ பாடல் சில வாரங்களுக்கு முன் வெளியாகி, 50 மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளைப் பெற்று ஹிட் ஆகியுள்ளது.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  விஜய்யின் வாரிசு திரைப்படத்தின் கிளைமேக்ஸ் படப்பிடிப்பு நாளை துவங்கவிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

  நடிகர் விஜய் தற்போது வம்சி பைடிபள்ளி இயக்கத்தில் ‘வாரிசு’ என்ற இருமொழி படத்தில் நடித்து வருகிறார். இப்படம் 2023 பொங்கலுக்கு வெளியாக உள்ள நிலையில், படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை நெருங்கி வரும் நிலையில், நவம்பர் 19-ஆம் தேதி பெல்லாரியில் இறுதிக்கட்ட படப்பிடிப்பை நடத்த திட்டமிட்டுள்ளனர். படக்குழு தற்போது ஒரு பாடல் காட்சியை படமாக்கும் வேலையில் ஈடுபட்டுள்ளதாகவும், அதன் பிறகு முழு டீமும் ஹைதராபாத்தில் இருந்து இறுதி காட்சியை படமாக்க இருப்பதாகவும் தகவல்கள் கூறுகின்றன.

  ஹைதராபாத்தில் 10 நாள் படப்பிடிப்பிற்கு பிறகு இப்படத்தின் படப்பிடிப்பு முழுவதுமாக முடிவடையும் என்று கூறப்படுகிறது. ஆக்‌ஷன், எமோஷன், ரொமான்ஸ், பொழுதுபோக்குடன் கூடிய இந்தப் படம் டிசம்பர் 5-ம் தேதி முதல் போஸ்ட் புரொடக்‌ஷனுக்கு செல்லும் என்று கூறப்படுகிறது. ஹைதராபாத்தில் கிளைமாக்ஸ் படப்பிடிப்பைத் தவிர, தொழில்நுட்பக் குழுவினர் லடாக்கிற்கும் செல்ல உள்ளதாக கூறப்படுகிறது. அங்கு சில மான்டேஜ் காட்சிகளை எடுக்க திட்டமிட்டிருக்கிறார்களாம்.

  எப்படி இருக்கிறது உதயநிதி ஸ்டாலினின் கலகத் தலைவன்?

  விஜய், ராஷ்மிகா மந்தனா, பிரகாஷ் ராஜ், சரத்குமார், பிரபு, ஷாம், ஸ்ரீகாந்த், யோகி பாபு, சங்கீதா கிரிஷ், சம்யுக்தா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ள இப்படத்திற்கு எஸ்.தமன் இசையமைத்துள்ளார். இதற்கிடையே ‘ரஞ்சிதமே’ பாடல் சில வாரங்களுக்கு முன் வெளியாகி, 50 மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளைப் பெற்று ஹிட் ஆகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  Published by:Shalini C
  First published:

  Tags: Actor Vijay