Home /News /entertainment /

சுனைனாவுக்கு சர்ப்ரைஸ் கொடுத்த விஜய்!

சுனைனாவுக்கு சர்ப்ரைஸ் கொடுத்த விஜய்!

சுனைனா - விஜய்

சுனைனா - விஜய்

'வாரிசு' படத்தின் ஹைதராபாத் ஷெட்யூலை முடித்துள்ள விஜய், சென்னையில் தொடங்கவுள்ள அடுத்த ஷெட்யூலில் கலந்துக் கொள்ளவிருக்கிறார்.

    உதவியாளர் எண்ணில் இருந்து நடிகை சுனைனாவுக்கு ஃபோன் செய்து சர்ப்ரைஸ் கொடுத்துள்ளார் நடிகர் விஜய். 

    தென்னிந்தியாவின் முன்னணி ஹீரோக்களில் ஒருவராகத் திகழும் விஜய், தனது சக நடிகர்களுடன் சிறந்த அன்பை பகிர்ந்துக் கொள்கிறார். இயக்குநர் அட்லீ இயக்கத்தில் விஜய் நடித்த ‘தெறி’ படத்தில் சுனைனா ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இதற்கிடையே சமீபத்தில் ஹைதராபாத்தில் இருந்து சென்னைக்கு சுனைனாவும் விஜய்யும் ஒரே விமானத்தில் பயணம் செய்துள்ளனர்.

    அப்போது ​​விஜய் தனது உதவியாளரின் எண்ணிலிருந்து சுனைனாவுக்கு போன் செய்து சுனைனாவை ஆச்சர்யப்படுத்தியுள்ளார். பின்னர் விஜய்யின் அருகில் அமர்ந்த சுனைனா, தனது சென்னை பயணம் குறித்தும் அவரது 'லத்தி' படத்தின் டீசர் வெளியீடு குறித்தும் தெரியப்படுத்தியுள்ளார். இதையடுத்து 'லத்தி' படத்திற்காக சுனைனாவுக்கு தனது வாழ்த்துகளை தெரிவித்த விஜய், விஷாலுக்கும் தனது வாழ்த்துகளை தெரிவிக்குமாறு சுனைனாவிடம் கூறினாராம். இந்த சுவாரஸ்யமான விஷயத்தை 'லத்தி' படத்தின் டீஸர் வெளியீட்டு விழாவின் போது பகிர்ந்துக் கொண்டார் சுனைனா.



    அஜித்தின் ஏகே61 படம் இணையத்தில் லீக் - ரசிகர்கள் அதிர்ச்சி

    'லத்தி' படத்தின் டீசர் ஜூலை 24-ம் தேதி பிரமாண்டமாக வெளியிடப்பட்டு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. அறிமுக இயக்குனர் வினோத்குமார் இயக்கியுள்ள இப்படம் செப்டம்பர் 15ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    எத்திராஜ் கல்லூரியில் துல்கர் சல்மானின் சீதா ராமம் ட்ரைலர் வெளியீடு!

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    மறுபுறம், வம்ஷி பைடிபள்ளி இயக்கத்தில் உருவாகி வரும் 'வாரிசு' படத்தின் ஹைதராபாத் ஷெட்யூலை முடித்துள்ள விஜய், சென்னையில் தொடங்கவுள்ள அடுத்த ஷெட்யூலில் கலந்துக் கொள்ளவிருக்கிறார். எமோஷனல் குடும்பப் படமான இது 2023 பொங்கலுக்கு வெளியாகிறது. இப்படத்தில் விஜய்யுடன் இணைந்து ராஷ்மிகா மந்தனா, பிரகாஷ் ராஜ், பிரபு, குஷ்பு, சங்கீதா மற்றும் ஷாம் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
    Published by:Shalini C
    First published:

    Tags: Actor Vijay

    அடுத்த செய்தி