விஜய் மக்கள் இயக்கத்தில் சில சந்தேகத்திற்கிடமான செயல்பாடுகள் நடந்து வருவதாக விஜய்யின் தந்தையும், இயக்குநருமான எஸ்.ஏ.சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.
நடிகர் விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர், ஒரு காலத்தில் விஜய் மக்கள் இயக்கத்தின் ரசிகர் மன்றத்தின் செயல்பாடுகளை கவனித்து வந்தார். ஆனால் ரசிகர் மன்றத்தை அரசியல் கட்சியாக்குவது தொடர்பாக மகன் விஜய்யுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் அவர் மன்றத்தை விட்டு வெளியேறினார்.
இந்நிலையில் சமீபத்தில் ஊடகம் ஒன்றிடம் பேசிய அவர், ரசிகர் மன்றங்களில் பணத்திற்காக பதவிகள் ஒதுக்கப்பட்டதாக குற்றச்சாட்டுகளை முன் வைத்தார். மேலும் இது ரசிகர் மன்றத்தை கீழ்நோக்கிய பாதையில் கொண்டு செல்லக்கூடும் என்றும் வருத்தம் தெரிவித்தார். முன்னணியில் இருக்கும் தவறான நபர்கள் விஜய் மக்கள் இயக்கத்தை பலவீனப்படுத்திவிட்டனர், அதிலிருந்து நீக்கப்பட்ட முக்கிய உறுப்பினர்களை மீண்டும் ஒருங்கிணைத்தால் மட்டுமே அதன் எதிர்காலம் நன்றாக இருக்கும். இது குறித்து தனது மகன் விஜய்யிடம் பலமுறை நடவடிக்கை எடுக்குமாறு கூறியதையும் சுட்டிக் காட்டினார்.
விக்ரமுக்கு மாரடைப்பு... திட்டமிட்டபடி இன்று மாலை வெளியாகுமா பொன்னியின் செல்வன் டீசர்?
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
அதோடு 'வாரிசு' படப்பிடிப்பில் ஹைதராபாத்தில் பிஸியாக இருப்பதால் தான், விஜய் தனது 80-வது பிறந்தநாளில் கலந்து கொள்ளவில்லை என்றும் எஸ்ஏ சந்திரசேகர் கூறியுள்ளார். தொழில் முன்னணியில் எஸ்.ஏ.சந்திரசேகர் தற்போது 'நான் கடவுள் இல்லை' என்ற படத்தை இயக்கி வருகிறார். அந்தப் படத்தின் தயாரிப்பு பணிகள் துரிதமாக நடைபெற்று வருகின்றன. யூடியூப் சேனலையும் தொடங்கியுள்ள அவர், தனது சினிமா பயணத்தையும் தனது மகன் விஜய்க்காக அவர் செய்த தியாகங்களையும் அதில் பகிர்ந்து கொள்கிறார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Actor Thalapathy Vijay