முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / ரெக்கார்டுகளின் மன்னர் விஜய்... ட்விட்டரை தெறிக்க விடும் ரசிகர்கள்!

ரெக்கார்டுகளின் மன்னர் விஜய்... ட்விட்டரை தெறிக்க விடும் ரசிகர்கள்!

விஜய்

விஜய்

ஒரு படத்தின் டைட்டில் / ஃபர்ஸ்ட்லுக் தொடங்கி வசூல் வரை புதிய சாதனைகளை படைப்பதும், அவரது சாதனையையை அவரே உடைப்பதும் விஜய்யின் வழக்கம்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

ரெக்கார்டுகளின் மன்னர் என ட்விட்டரில் விஜய்யை ட்ரெண்ட் செய்து வருகிறார்கள் அவரது ரசிகர்கள்.

விஜய் தற்போது நெல்சன் திலீப் குமாரின் பீஸ்ட் படத்தில் நடித்து வருகிறார். படத்தில் கதாநாயகியாக பூஜா ஹெக்டே நடிக்கிறார். அனிருத் இசையமைக்கும் இப்படத்தில் அபர்ணா தாஸ், யோகிபாபு உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள். விஜய்யின் ’சர்கார்’ படத்தைத் தொடர்ந்து இந்தப் படத்தையும் சன் பிக்சர்ஸ் தயாரிக்கிறது.

தளபதி 65 படம் என்றழைக்கப்பட்டு வந்த இந்தப் படத்தின் டைட்டிலும், ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரும் விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு வெளியிடப்பட்டது. படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு ஜார்ஜியாவில் முடிந்ததையடுத்து சென்னை திரும்பினர் படக்குழுவினர். இங்கு அடுத்தக்கட்ட படப்பிடிப்புக்கு திட்டமிட்ட நிலையில், கொரோனா இரண்டாம் அலையால் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால், மற்ற படங்களைப் போல ‘பீஸ்ட்’ படப்பிடிப்பும் தடைப்பட்டது.

இதையடுத்து தற்போது படத்தின் படப்பிடிப்பு டெல்லியில் நடந்து வருகிறது. அங்குள்ள ஷாப்பிங் மாலில் விஜய் நடந்து செல்லும் வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதற்கிடையே #MonarchOfRecordsVIJAY அதாவது ரெக்கார்டுகளின் மன்னர் விஜய் என ட்விட்டரில் ட்ரெண்ட் செய்து வருகின்றனர் அவரது ரசிகர்கள்.

ஒரு படத்தின் டைட்டில் / ஃபர்ஸ்ட்லுக் தொடங்கி வசூல் வரை புதிய சாதனைகளை படைப்பதும், அவரது சாதனையையை அவரே உடைப்பதும் விஜய்யின் வழக்கம். அந்த வகையில் மேற்குறிப்பிட்ட ஹேஷ்டேக்கை ட்ரெண்ட் செய்து வருகிறார்கள் விஜய் ரசிகர்கள்.

உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

First published:

Tags: Actor Vijay, News On Instagram