ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

குழந்தைகளுக்கு பொம்மைகள் பரிசளித்த கனடா வாழ் விஜய் ரசிகர்கள்!

குழந்தைகளுக்கு பொம்மைகள் பரிசளித்த கனடா வாழ் விஜய் ரசிகர்கள்!

விஜய் ரசிகர்கள்

விஜய் ரசிகர்கள்

வெளிநாடு வாழ் தமிழர்களை ஒன்றிணைக்கும் சக்தியாக அங்கேயும் நடிகர்கள் தான் இருக்கிறார்கள்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :

நடிகர்களின் பிறந்தநாளுக்கு கட்அவுட், தோரணம், போஸ்டர், மண் சோறு, தேர் இழுப்பு, அன்னதானம் என ரசிகர்கள் தடபுடலாக நிகழ்ச்சிகள் நடத்துவதுண்டு.

பேரிடர் காலங்களிலும் அன்னதானம், பிஸ்கெட் பாக்கெட் வழங்குவது என்று தங்களின் இருப்பை காண்பிப்பார்கள். கனடா வாழ் விஜய் ரசிகர்கள் வித்தியாசமாக கிறிஸ்மஸை முன்னிட்டு பொம்மைகள் வழங்கியிருக்கிறார்கள்.

திரைக்கு வெளியே ஆக்டிவாக செயல்படுவது விஜய் ரசிகர்கள் தான். இப்போது போட்டியாக சூர்யா ரசிகர்களும் நற்பணிகள் செய்ய ஆரம்பித்திருக்கிறார்கள். விஜய் மக்கள் இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட்டு வென்ற பிறகு ரசிகர்கள் மத்தியில் ஓர் உற்சாகம் ஏற்பட்டிருக்கிறது. எந்த நிகழ்வாக இருந்தாலும் விஜய் பேனரை கட்டி ஏதாவது செய்ய ஆரம்பித்துவிடுகிறார்கள்.

கனடாவில் வசிக்கும் விஜய் ரசிகர்களுக்கும் தொட்டில் பழக்கம் போய்விடுமா? பேனருக்குப் பதில் விஜய் டி-ஷர்ட் அணிந்து நற்பணியில் இறங்கியிருக்கிறார்கள். கனடாவில் வாழும் ஏழை குழந்தைகளுக்கு கிறிஸ்மஸை முன்னிட்டு இவர்கள் பொம்மைகள் பரிசளித்திருக்கிறார்கள். வெளிநாடு வாழ் தமிழர்களை ஒன்றிணைக்கும் சக்தியாக அங்கேயும் நடிகர்கள் தான் இருக்கிறார்கள்.

குழந்தைகளுக்கு பொம்மைகள் பரிசளித்த கனடா வாழ் விஜய் ரசிகர்கள்!

கனடா டொரேன்டோவில் வசிக்கும் தமிழர்கள் தான் இந்த நற்பணியை மேற்கொண்டிருக்கிறார்கள். இவர்களைப் பார்த்து மற்றப் பகுதியில் உள்ள ரசிகர்களும் இதேபோல் பரிசுகள் அளிக்க வாய்ப்புள்ளது. வெளிநாடுகளைப் பொறுத்தவரை யுஎஸ், யுகே, சிங்கப்பூருக்கு அடுத்து கனடாவில் விஜய் படங்கள் நல்ல வசூலை பெற்று வருகின்றன. எல்லாம் இந்த ரசிகர்களால் தான்.

உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

Published by:Shalini C
First published:

Tags: Actor Thalapathy Vijay