• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • Thalapathy Vijay: கொரோனாவுடன் போராடும் மருத்துவர்களுக்கு தங்க நாணயம் வழங்கிய விஜய் ரசிகர்கள்!

Thalapathy Vijay: கொரோனாவுடன் போராடும் மருத்துவர்களுக்கு தங்க நாணயம் வழங்கிய விஜய் ரசிகர்கள்!

விஜய்

விஜய்

செவிலியர்கள், ஆம்புலன்ஸ் டிரைவர்கள், மற்றும் சிடி ஸ்கேன் லேப் டெக்னீசியன்கள் ஆகியோர்களை பாராட்டி புதுக்கோட்டை தளபதி விஜய் மக்கள் இயக்கத்தினர் தங்க நாணயங்களை வழங்கி உள்ளனர்.

  • Share this:
    மருத்துவர்கள், செவிலியர்கள், ஆம்புலன்ஸ் டிரைவர்கள், மற்றும் சிடி ஸ்கேன் லேப் டெக்னீசியன்கள் ஆகியோர்களுக்கு விஜய் ரசிகர்கள் பரிசு பொருட்களை வழங்கி இருக்கிறார்கள்.

    தமிழ்நாட்டை தாக்கிய பெரும்பாலான பேரிடர்களின் போதும் விஜய் ரசிகர்கள் தேவைப்படுபவர்களுக்கு வேண்டிய அனைத்து உதவிகளையும் செய்திருக்கிறார்கள். 2020-ஆம் ஆண்டு கொரோனா தொற்றுநோயின் முதல் அலையின் போதும், இப்போது இருக்கும் இரண்டாவது அலையிலும் விஜய் மக்கள் இயக்கம், தீவிரமாக பணியாற்றி வருகிறார்கள்.

    தற்போது மக்களின் உயிரைக் காக்கும் பணியில் ஈடுபட்டுவரும் மருத்துவர்கள், செவிலியர்கள், ஆம்புலன்ஸ் டிரைவர்கள், மற்றும் சிடி ஸ்கேன் லேப் டெக்னீசியன்கள் ஆகியோர்களை பாராட்டி புதுக்கோட்டை தளபதி விஜய் மக்கள் இயக்கத்தினர் தங்க நாணயங்களை வழங்கி உள்ளனர். இந்தப் படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி பாராட்டுகளைப் பெற்று வருகிறது.

    அதோடு வரும் ஜூன் 22-ஆம் தேதி விஜய்யின் பிறந்தநாள் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக, விஜய் மக்கள் இயக்க உறுப்பினர்கள் தமிழகத்தின் பல பகுதிகளில், இந்த மாதம் முழுவதும், ஏழைகளுக்கு இலவச உணவை வழங்க திட்டமிட்டுள்ளனர்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Shalini C
    First published: