பிறந்தநாள் வாழ்த்துக்கூற விஜய் வீட்டின் முன்பு குவிந்த ரசிகர்கள்
நடிகர் விஜய்யின் 47வது பிறந்தநாளான இன்று விஜய்க்கு பிறந்தநாள் வாழ்த்து கூறுவதற்காக நூற்றுக்கும் மேற்பட்ட ரசிகர்கள் அதிகாலை முதலே விஜய் வீட்டின் முன்பு காத்திருக்கின்றனர்.
சென்னை நீலாங்கரை கேஷ்சுரினா டிரைவ் சாலையில் அமைந்துள்ள விஜய் வீட்டின் முன்பு குவிந்துள்ள ரசிகர்கள் விஜய் அண்ணா..வெளியில் வாருங்கள் என கோஷம் எழுப்பினர். பெண் ரசிகைகள் சிலர் பரிசுப் பொருட்களுடன் விஜய் வீட்டின் முன்பு காத்திருக்கின்றனர்.
இதனிடையே விஜய் வீட்டுக்கு வருகை தந்த காஞ்சிபுரம் மாவட்ட மக்கள் இயக்க பொறுப்பாளர் சரவணன் நடிகர் விஜய் ,வீட்டில் இல்லை என்று கூறி ரசிகர்களை களைந்து செல்லுமாறு கூறினார்.இதனைத் தொடர்ந்து காலை முதல் காத்திருந்த ரசிகர்கள், வாங்கி வந்திருந்த கேக்கை விஜய் வீட்டு வாசலில் வைத்து வெட்டினர். சிலர் விஜய் வீட்டின் முன் இருந்து செல்லாமல், தொடர்ந்து காத்திருந்தனர்.
உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
Published by:Ramprasath H
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.