Home /News /entertainment /

பீஸ்ட் ட்ரெய்லருக்கே இந்த கூட்டமா? - அசந்துபோன திரையரங்கு!

பீஸ்ட் ட்ரெய்லருக்கே இந்த கூட்டமா? - அசந்துபோன திரையரங்கு!

விஜய் ரசிகர்கள்

விஜய் ரசிகர்கள்

தமிழ்நாடு, கேரளாவில் விஜய் தான் கிங். இரண்டு மாநிலங்களிலும் பீஸ்டே முதலிடம் பிடிக்கும்.

நேற்று விஜய்யின் பீஸ்ட் படத்தின் ட்ரெய்லர் வெளியானது. இதனை காண கூடிய ரசிகர்களைப் பார்த்து, இது கூட்டமா இல்லை மாநாடா என்று அனைவரும் அசந்து போயினர்.

பீஸ்ட் ஏப்ரல் 13 வெளியாகிறது. அதற்கு அடுத்த நாள் கேஜிஎப் சேப்டர் 2 வெளியாகிறது. கேஜிஎப் சேப்டர் 1 அனைத்து மொழிகளிலும் பிரமாண்ட வரவேற்பை பெற்றது. இதனால் சேப்டர் 2 படத்துக்கு விளம்பரமே தேவைப்படவில்லை. படம் வந்தால் போதும், திரையரங்குகளுக்கு படையெடுப்போம் என்ற நிலையில் ரசிகர்கள் இருக்கிறார்கள். மேலும் கன்னடம், தெலுங்கு, மலையாளம், தமிழ், இந்தி என ஐந்து மொழிகளிலும் கேஜிஎப் வசூலை அள்ளியது. அப்படிப்பட்ட பான் - இந்தியா படத்துடன்தான் பீஸ்ட் போட்டியிடப் போகிறது. இதனால் ஆரம்பம் முதலே பீஸ்டா - கேஜிஎப் சேப்டர் 2 ஆ என்ற கேள்வி இருந்து வந்தது.

கன்னடம், இந்தியில் பீஸ்டை, கேஜிஎப் சேப்டர் 2 எளிதாக முந்தும். தெலுங்கில் கடுமையான போட்டியை கொடுக்கும். அங்கு பீஸ்டை அப்படம் முந்தவும் வாய்ப்புள்ளது. ஆனால், மீதமுள்ள தமிழ்நாடு, கேரளாவில் விஜய் தான் கிங். இரண்டு மாநிலங்களிலும் பீஸ்டே முதலிடம் பிடிக்கும். இதற்கு நேற்று ட்ரெய்லரை காண, கூடிய கூட்டமே சாட்சி.

வீட்டில் பார்த்த மாப்பிள்ளைக்கு ஓகே சொன்ன யாஷிகா ஆனந்த் - விரைவில் டும் டும் டும்!

பீஸ்ட் ட்ரெய்லரை சென்னை ரோகினி திரையரங்கு வளாகத்தில் திறந்தவெளியில் திரைகட்டி வெளியிட்டனர். அதனைக் காண நூற்றுக்கணக்கான ரசிகர்கள் திரண்டனர். பீஸ்ட் மாநாடா என்று கேட்கும் அளவுக்கு திரண்ட ரசிகர்களால் திரையரங்கே திணறிப்போனது. அவர்களே இந்தளவு கூட்டத்தை எதிர்பார்க்கவில்லை.

Vijay fans gather at Rohini Theater to watch the Beast trailer, Thalapathy Vijay Beast release date, beast, beast shooting, beast shooting in chennai, beast second schedule, beast pooja hegde, beast song shoot, pooja hegde thalapathy vijay, beast film, beast movie, beast vijay, beast first look, thalapathy vijay, vijay beast, nelson dilip kumar, விஜய், பீஸ்ட், பீஸ்ட் படப்பிடிப்பு, நெல்சன் திலீப்குமார், விஜய் படங்கள், பீஸ்ட் போஸ்டர்,  பீஸ்ட் திரைப்படம், பீஸ்ட் விஜய், விஜய் பூஜா ஹெக்டே, பீஸ்ட் பாடல் படப்பிடிப்பு, beast release date, beast release, பீஸ்ட் ரிலீஸ், பீஸ்ட் திரைப்படம் வெளியீடு
விஜய் ரசிகர்கள் கூட்டம்


ட்ரெய்லருக்கே இப்படியென்றால், படம் வெளியானால்...? ஏப்ரல் 13 பீஸ்ட் வெளியாகும் திரையரங்குப் பக்கம் போகாமலிருங்கள், ட்ராபிக் ஜாமிலிருந்து உங்களை காப்பாற்றிக் கொள்ளுங்கள்.



உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
Published by:Shalini C
First published:

Tags: Beast, Thalapathy, Thalapathy vijay

அடுத்த செய்தி