ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

துணிவு பொங்கல் வெளியீடு அறிவிக்கப்பட்டதும் விஜய் செய்த விஷயம்!

துணிவு பொங்கல் வெளியீடு அறிவிக்கப்பட்டதும் விஜய் செய்த விஷயம்!

விஜய்

விஜய்

வீரம்-ஜில்லா படங்களுக்குப் பிறகு அஜித்தும் விஜய்யும் மீண்டும் நேருக்கு நேர் மோதுவதை பார்க்க காத்திருக்கிறார்கள் ரசிகர்கள்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

    துணிவு பொங்கலுக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்ட நேரத்தில் தனது ட்விட்டர் புரொபைல் பிக்சரை மாற்றியிருக்கிறார் விஜய். 

    இயக்குநர் வம்சி இயக்கும் 'வாரிசு' படத்தில் நடித்து வருகிறார் விஜய். தில் ராஜு தயாரிக்கும் இப்படம் ஒரு எமோஷனல் குடும்பப் படம் என்று கூறப்படுகிறது. இதில் விஜய் வித்தியாசமான கேரக்டரில் நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார்.

    இவர்களுடன் பிரகாஷ் ராஜ், பிரபு, சரத்குமார், கணேஷ் வெங்கட்ராமன், ஷாம், குஷ்பு, சங்கீதா, யோகி பாபு, சம்யுக்தா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். வாரிசு படத்தின் மூலம் விஜய் படத்திற்கு முதன்முறையாக இசையமைக்கும் வாய்ப்பைப் பெற்றுள்ளார் தமன். தீபாவளிக்கு இதன் முதல் சிங்கிள் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், படம் பொங்கலுக்கு வெளியாகும் என்ற அறிவிப்பு மட்டும் வெளியானது.

    இதற்கிடையே அஜித்தின் துணிவு படமும் பொங்கலுக்கு வெளியாகும் என கூறப்பட்டது. வீரம்-ஜில்லா படங்களுக்குப் பிறகு அஜித்தும் விஜய்யும் மீண்டும் நேருக்கு நேர் மோதுவதை பார்க்க காத்திருக்கிறார்கள் ரசிகர்கள். ஆனாலும் துணிவு படம் பொங்கலுக்கு வெளியாவது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகாமல் இருந்தது.

    பொங்கலுக்கு வெளியாகும் அஜித்தின் துணிவு... படத்தைக் கைப்பற்றிய உதயநிதி ஸ்டாலின்!

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    இந்நிலையில் அஜித்தின் துணிவு திரைப்படம் பொங்கலுக்கு வெளியாகும் எனவும், அதனை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயெண்ட் மூவிஸ் நிறுவனம் தமிழகம் முழுவதும் வெளியிடுவதாகவும் இன்று காலை அறிவிப்பு வெளியானது. அந்த சமயத்தில் தனது ட்விட்டர் புரொபைல் பிக்சரை மாற்றியிருக்கிறார் விஜய்.

    இது இணையத்தில் பேசுபொருளாக மாறியிருக்கிறது.

    Published by:Shalini C
    First published:

    Tags: Actor Ajith, Actor Thalapathy Vijay