ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

ஆட்டநாயகன்! கேக் வெட்டி 'வாரிசு' வெற்றியைக் கொண்டாடிய விஜய் - வைரலாகும் புகைப்படங்கள்

ஆட்டநாயகன்! கேக் வெட்டி 'வாரிசு' வெற்றியைக் கொண்டாடிய விஜய் - வைரலாகும் புகைப்படங்கள்

வாரிசு பட வெற்றி விழாவில் பாடலாசிரியர் விவேக், இசையமைப்பாளர் தமன், இயக்குநர் வம்சியுடன் நடிகர் விஜய்

வாரிசு பட வெற்றி விழாவில் பாடலாசிரியர் விவேக், இசையமைப்பாளர் தமன், இயக்குநர் வம்சியுடன் நடிகர் விஜய்

ஹைதராபாத்தில் வாரிசு படத்தின் வெற்றி விழாவை படக்குழுவினருடன் நடிகர் விஜய் கேக் வெட்டி கொண்டாடினார்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

வம்சி இயக்கத்தில் விஜய் நடித்துள்ள வாரிசு திரைப்படம் உலக அளவில் இதுவரை ரூ. 210 கோடி வசூலித்துள்ளதாக சமீபத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது. இதனை தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர் சங்க தலைவர் திருப்பூர் சுப்ரமணியன் கடுமையாக விமர்சித்திருந்தார். வாரிசுடன் வெளியான நடிகர் அஜித்தின் துணிவு படமும் ரூ.200 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை.

கடந்த 16 ஆம் தேதி வாரிசு படத்தின் வெற்றியைக் கொண்டாடும் விதமாக நடிகர் விஜய் சென்னை ஈசிஆரில் உள்ள தனியார் விடுதியில் படக்குழுவினருக்கு விருந்தளித்திருந்தார். மேலும் படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவிக்கும்விதமாக பத்திரிகையாளர்கள் சந்திப்பில் இயக்குநர் வம்சி, சரத்குமார், ஷாம், சங்கீதா, விடிவி கணேஷ் போன்ற படக்குழுவினர் பங்கேற்று பேசினர்.

வாரிசு வெற்றி கொண்டாட்டத்துக்காக உருவாக்கப்பட்ட கேக்

விழாவில் பேசிய இயக்குநர் வம்சி,  ''எல்லோரும் என்னை தெலுங்கு இயக்குநர்னு சொல்லிட்டு இருந்தீங்க. அது என்னை காயப்படுத்தியது. நான் தமிழோ தெலுங்கோ இல்லை. நான் ஒரு நல்ல மனிதன். இன்னைக்கு தமிழ் மக்கள் அவங்க நெஞ்சில் ஒரு சிறிய இடம் கொடுத்திருக்கீங்க. அதற்கு நன்றி. இதுபோதும் எனக்கு'' என்று உருக்கமாக பேசினார்.

வாரசு வெற்றி விழாவில் தயாரிப்பாளர் தில் ராஜு, இயக்குநர் வம்சியுடன் நடிகர் விஜய்

இந்த நிலையில் ஹைதராபாத்தில் வாரிசு படத்தின் வெற்றி விழாவை படக்குழுவினருடன் நடிகர் விஜய் கேக் வெட்டி கொண்டாடினார். நிகழ்வில் இயக்குநர் வம்சி, பாடலாசிரியர் விவேக், இசையமைப்பாளர் தமன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியான நிலையில் அதற்கு நடிகை ராஷ்மிகா மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

First published:

Tags: Actor Thalapathy Vijay, Varisu