ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

நடிகர் விஜய் பிறந்த நாளையொட்டி சமூக வலைதளங்களில் CDP வெளியீடு…

நடிகர் விஜய் பிறந்த நாளையொட்டி சமூக வலைதளங்களில் CDP வெளியீடு…

விஜய் பிறந்த நாளையொட்டி வெளியிடப்பட்டCDP.

விஜய் பிறந்த நாளையொட்டி வெளியிடப்பட்டCDP.

Thalapathy Vijay CDP : ரசிகர்களால் உருவாக்கப்பட்ட விஜய் பிறந்த நாள் போஸ்டர்களும் சமூக வலைதளங்களில் வரவேற்பை பெற்று வருகிறது.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :

  நடிகர் விஜய் பிறந்த நாளையொட்டி, சமூக வலை தளங்களில் Common Display Picture எனப்படும் CDP வெளியிடப்பட்டுள்ளது. இதனை பல்வேறு பிரபலங்கள் தங்களது சமூக வலைதள பக்கங்களில் வெளியிட்டுள்ளனர்.

  தளபதி என்று ரசிகர்களால்  அன்புடன் அழைக்கப்படும் நடிகர் விஜய், தனது 48வது பிறந்த நாளை வரும் 22-ம் தேதி கொண்டாட உள்ளார். இதையொட்டி பல்வேறு நல உதவிகளை அவரது ரசிகர்கள் மேற்கொள்ள உள்ளனர்.

  குறிப்பாக விஜய் நடித்துவரும் தளபதி66 படத்துடைய டைட்டில் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

  இதேபோன்று விஜய்யின் 67வது படம் குறித்த அறிவிப்பும் வெளியாகும் என்ற நம்பிக்கையில் விஜய் ரசிகர்கள் உள்ளனர்.

  இந்த நிலையில் நடிகர் விஜய் பிறந்த நாளையொட்டி, சமூக வலை தளங்களில் Common Display Picture எனப்படும் CDP வெளியிடப்பட்டுள்ளது. இதனை பல்வேறு பிரபலங்கள் தங்களது சமூக வலைதள பக்கங்களில் வெளியிட்டுள்ளனர்.

  CDP- ஐ வெளியிட்டுள்ள பிரபலங்கள் தளபதி விஜய்க்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.

  இதேபோன்று ரசிகர்களால் உருவாக்கப்பட்ட விஜய் பிறந்த நாள் போஸ்டர்களும் சமூக வலைதளங்களில் வரவேற்பை பெற்று வருகிறது.

  விஜய் தற்போது தெலுங்கு முன்னணி இயக்குனர் வம்சி இயக்கும் படத்தில் நடித்து வருகிறார். தளபதி 66 என்ற ஒர்க்கிங் டைட்டிலில் இந்தப்படம் படமாக்கப்பட்டு வருகிறது.

  இதில் ராஷ்மிகா மந்தனா,பிரகாஷ்ராஜ், சரத்குமார், பிரபு, ஜெயசுதா, ஷாம் உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளனர். தமன் இசையில் 2,3 பாடல்கள் படமாக்கப்பட்டு விட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

  தெலுங்கில் சூப்பர் ஸ்டாராக இருக்கும் மகேஷ் பாபுவை இந்த படத்தில் சிறப்புத் தோற்றத்தில் இடம்பெற வைக்க முயற்சி மேற் கொள்ளப்பட்டுள்ளது.

  நீண்ட நாளுக்கு பின்னர் விஜய் இந்தப் படத்தில் குடும்பக் கதையில் நடித்துள்ளார். இதனால் படத்தின் மீதான ரசிகர்களின் ஆர்வம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்தப் படம் அடுத்த ஆண்டு பொங்கலுக்கு திரைக்கு வருகிறது.

  Published by:Musthak
  First published:

  Tags: Actor Vijay