நடிகர் விஜய் தமிழ் சினிமாவில் அசைக்க முடியாத இடத்தில் இருக்கிறார். தீபாவளி,பொங்கல் அன்று விஜய் படங்கள் ரிலீஸ் ஆக கூட தவறியிருக்கலாம். ஆனால் படம் ரிலீஸாகும் நாளை தீபாவளியாக மாற்றாமல் விடமாட்டார்கள் விஜய்யின் வெறித்தனமான ரசிகர்கள்.
1992 ஆம் ஆண்டு வெளியான நாளைய தீர்ப்பு படம் மூலம் விஜய் சினிமாவில் அறிமுகமானார். இந்த படத்தை விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கி இருந்தார். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றதையடுத்து ரசிகன், ராஜாவின் பார்வையிலே, கோயம்புத்தூர் மாப்பிள்ளை, லவ் டுடே ஆகிய படங்களில் நடித்தார்.
1997 ஆம் ஆண்டு வெளியான ‘காதலுக்கு மரியாதை’ திரைப்படம் சினிமாவில் விஜய்க்கு தனி மரியாதையை பெற்று தந்தது. 2000 களில் குஷி, பிரியமானவளே, ஷாஜஹான், யூத் என காதல் மன்னனாக வலம் வந்தார். பின்பு திருமலை, கில்லி, திருப்பாச்சி படங்களில் ஆக்ஷன் ஹீரோவாக மிரட்டினார். தற்போது எந்த ஒரு கதாபாத்திரத்திலும் நடிக்கக்கூடிய சிறந்த நடிகராக விஜய் வலம் வருகிறார்.மேலும் விஜய் தனது படங்களின் இசை வெளியீட்டு நிகழ்ச்சியில், ரசிகர்களுடன் உரையாடுவதை மிகவும் விரும்புவார். எல்லா இசை வெளியீட்டு நிகழ்ச்சியிலும் ரசிகர்களை ஊக்கப்படுத்த பல மோட்டிவேஷன் குட்டி ஸ்டோரியை கூறுவார்.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான மாஸ்டர் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் ‘நீ நதி போல ஓடிக்கொண்டிரு’ என்று குட்டி ஸ்டோரியை கூறினார். இந்நிலையில் விஜய் பிறந்தநாள் ஜூன் 22 ஆம் தேதி கொண்டாடப்படும் நிலையில் , பிரபல தயாரிப்பு நிறுவனம் ஸ்பெஷல் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது.
மாஸ்டர் பட இசை வெளியீட்டு விழாவில் விஜய் சொன்ன குட்டி ஸ்டோரியை அனிமேஷன் வீடியோவாக 7 ஸ்கிரீன் ஸ்டுடியோ வெளியிட்டு பிறந்த நாள் வாழ்த்தை தெரிவித்துள்ளது.
Published by:Tamilmalar Natarajan
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.