• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • Thalapathy Vijay: இளையராஜா முதல் அனிருத் வரை: விஜய் பாடிய பாடல்கள்!

Thalapathy Vijay: இளையராஜா முதல் அனிருத் வரை: விஜய் பாடிய பாடல்கள்!

விஜய்

விஜய்

Vijay Songs: தேவா தொடங்கி அனிருத் வரை தமிழ் சினிமாவின் அனைத்து முன்னணி இசையமைப்பாளர்களின் இசையிலும் பாடிவிட்டார் விஜய்

  • Share this:
Thalapathy Vijay Birthday: ஆடல், பாடல், நடிப்பு, நகைச்சுவை, ஆக்‌ஷன் என சினிமாவுக்கு தேவையான அனைத்திலும் விஜய் ஃபர்ஸ்ட் கிளாஸ். நடிப்பு, நடனத்தைப் போலவே விஜய்யின் குரலுக்கும் பல ரசிகர்கள் அடிமை. 1994-ல் ‘ரசிகன்’ படத்தில் இடம்பெற்ற ‘பாம்பே சிட்டி சுக்கா ரொட்டி’ என்ற பாடல் தான் சினிமாவில் அவர் பாடிய முதல் பாடல். தேவா இசையில், பின்னணி பாடகி சித்ராவுடன் இணைந்து இப்பாடலைப் பாடியிருந்தார் விஜய். இவர் பாடிய 35-வது பாடலாக மாஸ்டர் படத்தில் இடம்பெற்ற ‘குட்டி ஸ்டோரி’ அமைந்துள்ளது.

விஜய்யின் அம்மா அம்மா ஷோபா சந்திரசேகர் கர்நாடக சங்கீதத்தில் பயிற்சி பெற்றவர். எம்.எஸ்.விஸ்வநாதன், இளையராஜா, தேவா, ஸ்ரீகாந்த் தேவா, விஜய் ஆண்டனி, மணி ஷர்மா என பல இசையமைப்பாளர்களின் இசையில் பாடியுள்ளார். அம்மா பின்னணி பாடகி என்பதாலேயே என்னவோ விஜய்க்கும் பாடுவதில் ஆர்வம் ஏற்பட்டது. டான்ஸில் எப்படி அலட்டிக் கொள்ளாமல் கடினமான ஸ்டெப்களையும், எளிதாக ஆடுவது போன்றதொரு ஜாலத்தை திரையில் நிகழ்த்துவாரோ, பாடுவதிலும் விஜய் அப்படித்தான். அவர் பாடிய பாடல்கள் அனைத்தும் இயல்பாக நாமே முணுமுணுப்பது போல இருக்கும், ஆனால் அதன் ஹிட் வேற லெவல்!



1994-ல் தான் நடித்த ரசிகன் படத்தில் தேவா இசையில், பாடகி சித்ராவுடன் இணைந்து ‘பாம்பே சிட்டி சுக்கா ரொட்டி’ என தனது முதல் பாடலை பாடினார் விஜய். தொடர்ந்து விஷ்ணு, தேவா, மாண்புமிகு மாணவன், காலமெல்லாம் காத்திருப்பேன், ஒன்ஸ்மோர், நெஞ்சினிலே என தேவாவின் இசையில் தான் அதிக பாடல்களைப் பாடியிருக்கிறார் விஜய். இசைஞானி இளையராஜாவின் இசையில் காதலுக்கு மரியாதை படத்தில் இடம்பெற்ற ‘ஓ பேபி பேபி’ பாடலை பாடியதும் விஜய் தான். தன் படங்களில் மட்டும் பாடி வந்த விஜய் மற்ற நடிகர்களின் படங்களிலும் பாடியிருக்கிறார். ‘துள்ளி திரிந்த காலம்’ படத்தில் ஜெயந்தின் இசையில் ‘டக் டக் டக் டக்’ என்ற பாடலையும், யுவனின் இசையில் வேலை படத்தில் ‘காலத்துக்கேத்த ஒரு கானா’ என்ற பாடலையும் பாடினார்.



விஜயகாந்த், சூர்யா நடிப்பில் வெளியான பெரியண்ணா படத்தில் 3 பாடல்களையும் பாடினார். தமிழன் படத்தில் டி.இமானின் இசையில் பிரியங்கா சோப்ராவுடன் இணைந்து ’உள்ளத்தை கிள்ளாதே’ என்ற பாடலை பாடினார். ஸ்ரீகாந்த் தேவா இசையில் பகவதி படத்தில், ‘கொக்ககோலா பிரவுன் கலருடா’, என்ற பாடலையும் தேவி ஸ்ரீபிரசாத் இசையில் சச்சின் படத்தில், ‘வாடி வாடி வாடி கைபடாத சிடி’ ஆகிய பாடல்களையும் பாடினார். இந்த இரண்டு பாடல்களிலும் வடிவேலுவின் பங்களிப்பும் இருக்கும்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.



2005-ல் இருந்து 2012 வரை எந்த பாடலும் விஜய் பாடவில்லை. பின்னர் 2012-ல் ஹாரீஸ் ஜெயராஜ் இசையில் துப்பாக்கி படத்தில் ‘கூகுள் கூகுள் பண்ணி பாத்தேன்’ பாடலை ஆண்ட்ரியாவுடன் இணைந்து பாடியிருந்தார். பாடல் பெரும் வரவேற்பைப் பெற்றது. அதிலிருந்து தலைவா, ஜில்லா, கத்தி, புலி, தெறி, பைரவா, பிகில், மாஸ்டர் என தான் நடித்த படங்களில் தலா ஒரு பாடலை பாடியிருக்கிறார். இதில் மெர்சல் மற்றும் சர்கார் ஆகிய படங்களில் மட்டும் பாடவில்லை. ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் வெறித்தனம் பாடலும், அனிருத் இசையில் குட்டி ஸ்டோரி பாடலும் ரசிகர்களிடையே தெறி ஹிட்.



ஆக, தேவா தொடங்கி அனிருத் வரை தமிழ் சினிமாவின் அனைத்து முன்னணி இசையமைப்பாளர்களின் இசையிலும் பாடிவிட்டார் விஜய். தற்போது தளபதி 65 படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் அவர், இந்தப் படத்திலும் ஒரு பாடல் பாடுவார் எதிர்பார்ப்போம்.



உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Shalini C
First published: