ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

Thalapathy Vijay: பிரபலங்களின் பிறந்தநாள் வாழ்த்து மழையில் விஜய்!

Thalapathy Vijay: பிரபலங்களின் பிறந்தநாள் வாழ்த்து மழையில் விஜய்!

விஜய்

விஜய்

சின்ன குழந்தைகள் முதல் வயதான தாத்தா, பாட்டி வரை குடும்பத்திலுள்ள அனைவருக்கும் ஒரு நடிகரைப் பிடிக்கிறதென்றால் அது ரஜினிக்குப் பிறகு விஜய் தான்.

  • News18 Tamil
  • 3 minute read
  • Last Updated :

தமிழ் சினிமாவின் உச்ச நடிகராக வலம் வரும் விஜய் இன்று தனது 48-வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார்.

அவர் இந்த இடத்திற்கு வர நடிப்பு, நடனம், இசை, ஆக்‌ஷன், திரை மொழி, உடல் மொழி என ஒவ்வொன்றிலும் தன்னை செதுக்கியிருக்கிறார். சின்ன குழந்தைகள் முதல் வயதான தாத்தா, பாட்டி வரை குடும்பத்திலுள்ள அனைவருக்கும் ஒரு நடிகரைப் பிடிக்கிறதென்றால் அது ரஜினிக்குப் பிறகு விஜய் தான். பல இளம் தலைமுறையினருக்கு உதாரணமாக திகழும் விஜய்க்கு பிரபலங்கள் பலர் தங்கள் பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்து வருகிறார்கள். அவற்றில் சிலவற்றை இங்கே பதிவிடுகிறோம்.

விஜய்க்கு பிகில் பட தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி வாழ்த்து.

நடிகர் விஜய் பிறந்தநாளுக்கு இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தனது பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.

பிகில் பட நடிகை அமிர்தா ஐயர் தனது வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.

வாரிசு முதல் தோற்றம் சிறப்பாக இருப்பதாகக் கூறி தனது நண்பர் விஜய்க்கு பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

ஆதவ் கண்ணதாசன் தனது பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.

விஜய்யுடன் சர்கார் படத்தில் நடித்த நடிகை வரலட்சுமி சரத்குமார் தனது பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.

விஜய்யின் துப்பாக்கி, கத்தி, சர்கார் ஆகியப் படங்களை இயக்கிய இயக்குநர் ஏ.ஆர்,முருகதாஸின் பிறந்தநாள் வாழ்த்து.

”இன்றும் என்றென்றும் உங்கள் பிறந்தநாளில் அதிக அதிர்ஷ்டம், மகிழ்ச்சி, வெற்றி மற்றும் இறைவனின் ஆசீர்வாதத்துடன் ஆசீர்வதிக்கப்படுவீராக என் சகோதரரே.. பிறந்தநாள் வாழ்த்துக்கள். ஜொலித்துக் கொண்டே இருங்கள்” எனக் குறிப்பிட்டுள்ளார் நடிகை குஷ்பு.

பீஸ்ட் படப்பிடிப்பு தளத்தில் விஜய்யுடன் எடுத்துக்கொண்ட படத்தைப் பதிவிட்டு தனது பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்துள்ளார் நடிகர் சிவகார்த்திகேயன்.

இசையமைப்பாளரும் நடிகருமான ஜி.வி.பிரகாஷ் வாழ்த்து.

எப்போதும் எங்களை ஊக்குவித்து ஊக்கப்படுத்துவதற்கு நன்றி அண்ணா, எனக் குறிப்பிட்டு நடிகர் விஜய்க்கு தனது பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்துள்ளார் பாடகர் கிரிஷ்.

First published:

Tags: Actor Thalapathy Vijay