தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரம் தளபதி விஜய் இன்று தனது 48-வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். தனது ஆளுமையால் நாடு முழுவதும் தீவிர ரசிகர்களைக் கொண்டுள்ள இவர் தற்போது வாரிசு திரைப்படத்தில் நடித்து வருகிறார். மாஸ்டர், மெர்சல், பிகில் போன்ற வெற்றி திரைப்படங்களை வழங்கிய விஜய் ரசிகர்களை வெகுவாக ஈர்க்கும் நடனக் கலைஞராகவும், உதவும் குணம் படைத்தவராகவும் திகழ்கிறார்.
விஜய்யின் பிறந்தநாளை ரசிகர்கள் கொண்டாடும் இத்தருணத்தில், அவரைப் பற்றி அதிகம் அறியப்படாத சில உண்மைகளை நாங்கள் உங்களுக்கு சொல்கிறோம்.
சூர்யாவுக்கு குரல் கொடுத்த விஜய்
தனது அட்டகாசமான நடிப்புத் திறமையை தவிர, விஜய் தனது பாடும் திறன் மற்றும் நடன அசைவுகளுக்காகவும் அறியப்படுகிறார். பீஸ்ட்டில் ஜாலியோ ஜிம்கானா, மாஸ்டரில் வைரல் ஹிட்டான குட்டி ஸ்டோரி, பிகில் படத்தில் வெறித்தனம் என தான் பாடிய பாடல்களால் ரசிகர்களுக்கு எக்ஸ்ட்ரா எனர்ஜி ஊட்டுகிறார். தான் நடிக்கும் படங்கள் மட்டுமல்லாமல், நடிகர் சூர்யாவின் பெரியண்ணா படத்தில் மூன்று பாடல்களுக்கு விஜய் குரல் கொடுத்தார் என்பது உங்களுக்குத் தெரியுமா? அந்தப் படத்தை விஜய்யின் அப்பா எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கியது குறிப்பிடத்தக்கது.
ரஜினிகாந்தின் ரசிகர்
ரஜினிகாந்தின் ரசிகர் இல்லாதவர் யார் தான் இருக்கிறார்கள்? 1992-ஆம் ஆண்டு தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமான நடிகர் விஜய், ரஜினிகாந்தின் அண்ணாமலை திரைப்படத்தின் பிரபலமான டயலாக்கை ஆடிஷனில் பேசிக்காட்டி தான் வாய்ப்பு பெற்றாராம்.
ஃபேமிலி மேன்
நடிகர் விஜய் தனது குடும்பத்தின் மீது அதிக அக்கறை மிகுந்தவர். தனது சகோதரி வித்யாவுடன் நெருக்கமாக இருந்தார். ஆனால் இரண்டு வயதிலேயே வித்யா மறைந்தார். தனது தயாரிப்பு நிறுவனத்திற்குக் கூட விவி- வித்யா-விஜய் புரொடக்ஷன்ஸ் என்று பெயரிட்டுள்ளார்.
பிரபலங்களின் பிறந்தநாள் வாழ்த்து மழையில் விஜய்!
உதவும் குணம் படைத்தவர்
விஜய் சமூக நலப்பணி அமைப்பான விஜய் மக்கள் இயக்கத்தை நிறுவினார். இது ஜூலை 2009-ல் அதிகாரப்பூர்வமாக தொடங்கப்பட்டது. இந்தத் தொண்டு நிறுவனம் பல நலப்பணிகளை செய்து வருகிறது. விஜய்யின் ரசிகர்களும் ஒவ்வொரு ஆண்டும் ரத்ததான முகாமில் கலந்து கொள்கின்றனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
திறமைகளை ஊக்குவிப்பவர்
விஜய் தனது 67-வது படத்திற்கு தயாராகி வரும் நிலையில், தமிழ் திரையுலகிற்கு பல புதிய திறமைகளை அறிமுகப்படுத்தியிருக்கிறார். அதிலும் கிட்டத்தட்ட 20 இயக்குனர்களை தமிழ் சினிமாவுக்கு அறிமுகப்படுத்தியிருப்பது குறிப்பிடத்தக்கது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.