Home /News /entertainment /

Beast, KGF 2: பீஸ்ட், கே.ஜி.எஃப் 2... தமிழக வசூலில் டாப் இதுதான்!

Beast, KGF 2: பீஸ்ட், கே.ஜி.எஃப் 2... தமிழக வசூலில் டாப் இதுதான்!

பீஸ்ட் - கே.ஜி.எஃப் 2

பீஸ்ட் - கே.ஜி.எஃப் 2

தமிழகத்தில் பீஸ்ட் படத்திற்கு கிடைத்த அதே வரவேற்பு கே.ஜி.எஃப் 2-விற்கும் கிடைத்தது.

    விஜய்யின் பீஸ்ட், யாஷ் நடித்த கே.ஜி.எஃப் 2 இரண்டும் ஒரே நேரத்தில் வெளியாகி சினிமா ரசிகர்களின் பார்வைகளைப் பெற்றன. இதில் தமிழகத்தில் எந்தப் படம் அதிகம் வசூலித்திருக்கிறது தெரியுமா?

    நடிகர் விஜய்யின் 65-வது படமான ’பீஸ்ட்’ திரைப்படத்தை நெல்சன் திலீப் குமார் இயக்கியுள்ளார். படத்தில் கதாநாயகியாக பூஜா ஹெக்டே நடித்துள்ளார். அனிருத் இசையமைத்துள்ள இப்படத்தில் அபர்ணா தாஸ், யோகிபாபு உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். விஜய்யின் ’சர்கார்’ படத்தைத் தொடர்ந்து இந்தப் படத்தையும் சன் பிக்சர்ஸ் தயாரித்திருந்தது.

    ரசிகர்களிடம் பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கிய பீஸ்ட் திரைப்படம் கடந்த ஏப்ரல் 13-ம் தேதி வெளியாகியது. ஆனால் படம் எதிர்பார்த்தபடி இல்லையென விஜய் ரசிகர்களே தங்கள் ஏமாற்றத்தை வெளிப்படுத்தினர். கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும் வசூலில் முன்னோக்கி சென்று கொண்டிருக்கிறது பீஸ்ட்.

    அதே போல், நடிகர் யாஷ் நடிப்பில், பிரசாந்த் நீல் இயக்கத்தில் கடந்த 2019-ல் வெளியான கே.ஜி.எஃப் படத்தின் முதல்பாகம் இந்திய அளவில் பிரமாண்ட வரவேற்பை பெற்றது. இதன் அடுத்த பாகம், கடந்த 2020-ல் வெளியாக வேண்டியிருந்த நிலையில் கொரோனா காரணமாக வெளியீடு தொடர்ந்து ஒத்தி வைக்கப்பட்டு கடந்த ஏப்ரல் 14-ம் தேதி உலகம் முழுவதும் 10 ஆயிரத்திற்கும் அதிகமான ஸ்க்ரீன்களில் வெளியாகியது.

    KGF 2 Collection: 900 கோடிக்கும் மேல் வசூலித்த யாஷின் கே.ஜி.எஃப் 2!

    கே.ஜி.எஃப் 2 படத்தில் ஸ்ரீநிதி ஷெட்டி ஹீரோயினாக நடிக்க, பாலிவுட் நடிகர் சஞ்சய்தத், ரவீணா டாண்டன், பிரகாஷ் ராஜ், மாளவிகா அவினாஷ், அச்சுத் குமார், ராவ் ரமேஷ், ஈஸ்வரி ராவ், ராமச்சந்திர ராஜு, ஜான் கொக்கேன் உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். இந்தப் படம் உலகம் முழுக்க கிட்டத்தட்ட 900 கோடி ரூபாய் வசூலித்திருப்பதாக தகவல்கள் கூறுகின்றன.

    இந்நிலையில் தமிழகத்தில் பீஸ்ட் படத்திற்கு கிடைத்த அதே வரவேற்பு கே.ஜி.எஃப் 2-விற்கும் கிடைத்தது. அதனால் இதில் எந்த படம் தமிழகத்தில் அதிகம் வசூலித்திருக்கும் என்ற கேள்வி எழுந்தது. அதற்கு தற்போது பதில் கிடைத்திருக்கிறது.

    கை, கால் வரல... பேசவும் முடியல... சின்னத்திரை பிரபலம் ப்ரீத்தா ராகவ் கண்ணீர்

    அதாவது விஜய்யின் பீஸ்ட் தமிழ்நாடு முழுவதும் ரூ. 102 கோடியும், யாஷின் KGF 2 ரூ.70 கோடியும் வசூலித்துள்ளதாக செய்திகள் வெளியாகியிருக்கின்றன.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Shalini C
    First published:

    Tags: Beast, KGF 2

    அடுத்த செய்தி