Home /News /entertainment /

Beast Vs KGF 2: ஒரே நேரத்தில் மோதும் விஜய்யின் பீஸ்ட் மற்றும் கே.ஜி.எஃப் 2!

Beast Vs KGF 2: ஒரே நேரத்தில் மோதும் விஜய்யின் பீஸ்ட் மற்றும் கே.ஜி.எஃப் 2!

பீஸ்ட் - KGF 2

பீஸ்ட் - KGF 2

கேஜிஎஃப் திரைப்படம் இந்தியளவில் வெற்றிபெற்ற படம் என்பதால், பீஸ்ட் படத்தின் வியாபாரத்தில் சிக்கல் ஏற்படும் என எதிர்பார்க்கப்பட்டது.

விஜய்யின் பீஸ்ட் மற்றும் கேஜிஎஃப் 2 திரைப்படம் ஒன்றாக மோதுவது திரை ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

தென்னிந்திய சினிமாவின் மிகப்பெரிய ஸ்டாரான விஜய்யின் பீஸ்ட் மற்றும் ஒட்டுமொத்த இந்தியாவே எதிர்பார்க்கும் தென்னிந்திய திரைப்படமான கேஜிஎஃப் 2 திரைப்படங்கள் ஒரே வாரத்தில் மோதவிருப்பது தான் தற்போது திரையுலகின் ஹைலைட் டாபிக்.

பெரியளவிலான வர்த்தகம் இல்லாத கன்னட திரைத்துறையில் இருந்து 2018-ம் ஆண்டு வெளியாகி உலகளவில் 250 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்து மிரட்டிய திரைப்படம் தான் கேஜிஎஃப். நவீன சினிமாவில் மாஸ் படங்களுக்கான சிறந்த உதாரணமாக எல்லோராலும் சுட்டிக்காட்டப்படும் இப்படத்தின் இரண்டாம் பாகம், கொரோனா காரணமாக பலமுறை தள்ளிப்போய் தற்போது ஏப்ரல் 14-ம் தேதி வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளையில் விஜய்யின் பீஸ்ட் படமும் ஏப்ரல் 13-ல் வெளியாகும் என்ற அதிகாரப்பூர்வ செய்தி வெளிவந்திருப்பது, ஒட்டுமொத்த திரை ரசிகர்களையும் உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது. மேலும் இந்த இரண்டு படங்களுக்குமே இந்தியளவில் பெரிய எதிர்பார்ப்பு இருப்பதால், தியேட்டர் பிடிப்பதில் மிகப்பெரிய அளவில் போட்டி நடக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

விஜய் டிவி டிடி-க்கு வளைகாப்பு?

கேஜிஎஃப் திரைப்படம் இந்தியளவில் வெற்றிபெற்ற படம் என்பதால், பீஸ்ட் படத்தின் வியாபாரத்தில் சிக்கல் ஏற்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தற்போதைய நிலவரப்படி தமிழ் சினிமாவில் வேறெந்த படமும் வர்த்தகம் ஆகாத அளவில் விஜய்யின் பீஸ்ட் படத்தின் வியாபாரம் சாதனை படைத்திருப்பதாக திரை வட்டாரத்தில் சொல்லப்படுகிறது.

சகோதரிகள் அணி... கவனம் பெறும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் - செளந்தர்யா ரஜினிகாந்த் படம்!

எது எப்படி இருந்தாலும் தென்னக மொழியை சேர்ந்த இரண்டு படங்களின் மோதல் இந்தியா முழுவதும் கவனம் ஈர்த்திருப்பது தென்னக திரைத்துறைக்கு பெருமை சேர்க்கும் வண்ணம் அமைந்துள்ளது.



உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
Published by:Shalini C
First published:

Tags: Actor Vijay

அடுத்த செய்தி