முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / Beast: கரூர் மாநகராட்சியில் பீஸ்ட் வெளியாகாது - அதிகாரப்பூர்வ அறிவிப்பு

Beast: கரூர் மாநகராட்சியில் பீஸ்ட் வெளியாகாது - அதிகாரப்பூர்வ அறிவிப்பு

பீஸ்ட்

பீஸ்ட்

பீஸ்ட் படத்துக்கான முன்பதிவு தொடங்கியதுமே, பல இடங்களில் வசூல் சாதனை புரிந்து வருகிறது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

கரூர் மாநகராட்சி பகுதியில் உள்ள திரையரங்குகளில் பீஸ்ட் திரைப்படம் வெளியாகாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

நடிகர் விஜய்யின் 65-வது படமான ’பீஸ்ட்’ திரைப்படத்தை நெல்சன் திலீப் குமார் இயக்கியுள்ளார். படத்தில் கதாநாயகியாக பூஜா ஹெக்டே நடித்துள்ளார். அனிருத் இசையமைக்கும் இப்படத்தில் அபர்ணா தாஸ், யோகிபாபு உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். விஜய்யின் ’சர்கார்’ படத்தைத் தொடர்ந்து இந்தப் படத்தையும் சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ளது.

காதலர் தினத்தை முன்னிட்டு பீஸ்ட் படத்தின் முதல் பாடலான ‘அரபிக் குத்து’ லிரிக் வீடியோ வெளியானது. அதன் ப்ரோமோவில் இயக்குநர் நெல்சன், இசையமைப்பாளர் அனிருத் மற்றும் நடிகரும், அரபிக் குத்து பாடலாசிரியரான சிவகார்த்திகேயனும் இடம் பெற்றிருந்தனர். அவர்களுடன் ஃபோனில் பேசியிருந்தார் விஜய். இதைக்கேட்டு உற்சாகமானார்கள் ரசிகர்கள்.

தொடர்ந்து ஜாலியோ ஜிம்கானா, பீஸ்ட் மோடு ஆகியப் பாடல்களும் வெளியாகின. இதையடுத்து நாளை பிரமாண்டமாக வெளியாகிறது பீஸ்ட் திரைப்படம். இதனால் அதிக உற்சாகத்துடன் இருக்கிறார்கள் ரசிகர்கள். படத்துக்கான முன்பதிவு தொடங்கியதுமே, பல இடங்களில் வசூல் சாதனை புரிந்து வருகிறது.

இந்நிலையில் கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் உள்ள திரையரங்குகளில் நடிகர் விஜய்யின் பீஸ்ட் திரைப்படம் வெளியாகாது, என மாநகராட்சி தியேட்டர் உரிமையாளர்கள் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். இதைக்கேட்ட கரூர் மாநகராட்சியை சேர்ந்த விஜய் ரசிகர்கள், அதிர்ச்சியில் ஆழ்ந்திருக்கிறார்கள்.

உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

First published: