Home /News /entertainment /

Beast: ட்ரைலர் சாதனையில் வலிமையை அடித்து நொறுக்கிய விஜய்யின் பீஸ்ட்!

Beast: ட்ரைலர் சாதனையில் வலிமையை அடித்து நொறுக்கிய விஜய்யின் பீஸ்ட்!

விஜய் - அஜித்

விஜய் - அஜித்

அஜித்தின் வலிமைப் படத்தின் ட்ரெய்லர் 3 மாதங்களில் பெற்ற யூடியூப் பார்வையை (23 மில்லியன்கள்) பீஸ்ட் வெறும் 24 மணி நேரத்தில்  கடந்துள்ளது.

தென்னிந்திய மொழி படங்களின் ட்ரெய்லரில் விஜய்யின் பீஸ்ட் அனைத்து சாதனைகளையும் அடித்து நொறுக்கியுள்ளது.

ஏப்ரல் 13-ஆம் தேதி விஜய்யின் பீஸ்ட் திரைப்படம் வெளியாகிறது. நெல்சன் திலீப்குமார் இயக்கியிருக்கும் பீஸ்டின் இரு பாடல்கள் ஏற்கனவே வெளியாகி யூடியூப் பார்வையில் சாதனை படைத்தன. இந்நிலையில், ஏப்ரல் 2 மாலை 6 மணிக்கு பீஸ்டின் ட்ரெய்லர் வெளியானது. ஆக்ஷன் நிறைந்த இந்த ட்ரெய்லரை 24 மணி நேரத்தில் 30 மில்லியன்கள் முறை யூடியூபில் பார்த்துள்ளனர். அதாவது மூன்றுகோடி முறை பார்க்கப்பட்டுள்ளது. 2.2 மில்லியன் - அதாவது 22 லட்சம் லைக்குகளையும் பெற்றது.

இதற்கு முன் பிரபாஸின் ராதே ஷ்யாம் திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியான 24 மணி நேரத்தில் 23.2 மில்லியன் பார்வைகளை பெற்றதே தென்னிந்திய மொழி சினிமாவின் ட்ரெய்லர் சாதனையாக இருந்தது. அதனை பீஸ்ட் உடைத்திருக்கிறது. ஏப்ரல் 14 பீஸ்ட்டுக்குப் போட்டியாக வெளியாகும் கேஜிஎப் சேப்டர் 2 படத்தின் ட்ரெய்லர் இதுவரை 150 மில்லியன்களுக்கு மேல் பார்வைகளை பெற்றுள்ளது. இது தெலுங்கு, தமிழ், மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய ஐந்து மொழிகளை உள்ளடக்கியது. பீஸ்டின் தமிழ் ட்ரெய்லர் மட்டுமே இதுவரை வெளியாகியுள்ளது. அதாவது ஒரே மொழியில் முதல் 24 மணி நேரத்தில் 30 மில்லியன்கள் பார்வையை பீஸ்ட் பெற்றுள்ளது.

4 கார் இருக்கும் போது எதுக்காக சைக்கிள்ல போனீங்க? நெல்சன் கேள்விக்கு விஜய் சொன்ன பதில்!



அஜித்தின் வலிமைப் படத்தின் ட்ரெய்லர் 3 மாதங்களில் பெற்ற யூடியூப் பார்வையை (23 மில்லியன்கள்) பீஸ்ட் வெறும் 24 மணி நேரத்தில்  கடந்து  வலிமை ட்ரெய்லரின் யூடியூப் பார்வைகளை ஒன்றுமில்லாமல் செய்துள்ளது. படமும் வசூலில் பெரும் சாதனைப் படைக்கும் என்பதற்கு முன்னோட்டமாக இந்த ட்ரெய்லர் சாதனை பார்க்கப்படுகிறது.



உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
Published by:Shalini C
First published:

Tags: Actor Thalapathy Vijay, Beast

அடுத்த செய்தி