Home /News /entertainment /

முன்பதிவு தொடங்கிய வேகத்திலேயே விற்றுத் தீர்ந்த பீஸ்ட் டிக்கெட்டுகள்!

முன்பதிவு தொடங்கிய வேகத்திலேயே விற்றுத் தீர்ந்த பீஸ்ட் டிக்கெட்டுகள்!

பீஸ்ட் ரிலீஸ்

பீஸ்ட் ரிலீஸ்

பீஸ்ட் புக்கிங் தொடங்கிய சில மணி நேரத்திலேயே பெரும்பாலான டிக்கெட்டுகள் விற்றுத் தீர்ந்துள்ளன.

    பீஸ்ட் படத்தின் முன்பதிவு தொடங்கிய குறுகிய காலத்திலேயே பெரும்பாலான டிக்கெட்டுகள் அனைத்தும் விற்றுத் தீர்ந்துள்ளன.

    நடிகர் விஜய் தற்போது தனது 65-வது படமான ’பீஸ்ட்’ படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்தத் திரைப்படத்தை இயக்குநர் நெல்சன் திலீப் குமார் இயக்கியுள்ளார். படத்தில் கதாநாயகியாக பூஜா ஹெக்டே நடித்துள்ளார். அனிருத் இசையமைக்கும் இப்படத்தில் அபர்ணா தாஸ், யோகிபாபு உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். விஜய்யின் ’சர்கார்’ படத்தைத் தொடர்ந்து இந்தப் படத்தையும் சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ளது.

    படத்தின் பாடல்களும், ட்ரைலரும் வெளியாகி ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது. இதையடுத்து படம் வரும் 13-ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதையொட்டி விஜய் கலந்துக் கொள்ளும் விஜய்யுடன் நேருக்கு நேர் என்ற சிறப்பு நிகழ்ச்சியையும் ஒளிபரப்பவிருக்கிறது சன் டிவி.

    எப்போதும் விஜய் சாரின் தீவிர ரசிகன் நான் - பாலிவுட் நடிகர் வருண் தவான்!

    இந்நிலையில் இன்று பீஸ்ட் படத்தின் டிக்கெட் புக்கிங் தொடங்கியிருக்கிறது. புக்கிங் தொடங்கிய சில மணி நேரத்திலேயே பெரும்பாலான டிக்கெட்டுகள் விற்றுத் தீர்ந்துள்ளன. இந்த விஷயம் விஜய் ரசிகர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. பொதுவாகவே விஜய் படங்கள் என்றால் பாக்ஸ் ஆபிஸில் கலெக்‌ஷனை அள்ளும், அந்த வகையில் பீஸ்ட் திரைப்படமும் அதிக வசூலைப் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Shalini C
    First published:

    Tags: Actor Vijay, Beast

    அடுத்த செய்தி