• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • Beast: 3-ம் கட்ட படப்பிடிப்பை தொடங்கிய பீஸ்ட் குழுவினர் - மகிழ்ச்சியில் விஜய் ரசிகர்கள்!

Beast: 3-ம் கட்ட படப்பிடிப்பை தொடங்கிய பீஸ்ட் குழுவினர் - மகிழ்ச்சியில் விஜய் ரசிகர்கள்!

பீஸ்ட்

பீஸ்ட்

  • Share this:
    விஜய்யின் ‘பீஸ்ட்’ படத்தின் மூன்றாம் கட்ட படப்பிடிப்பு தொடங்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

    நடிகர் விஜய்யின் 65-வது படமான ’பீஸ்ட்’ திரைப்படத்தை நெல்சன் திலீப் குமார் இயக்குகிறார். படத்தில் கதாநாயகியாக பூஜா ஹெக்டே நடிக்கிறார். அனிருத் இசையமைக்கும் இப்படத்தில் அபர்ணா தாஸ், யோகிபாபு உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளனர். விஜய்யின் சர்கார் படத்தைத் தொடர்ந்து இந்தப் படத்தையும் சன் பிக்சர்ஸ் தயாரிக்கிறது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    முதலில் ஜார்ஜியாவில் பீஸ்ட் படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு தொடங்கப்பட்டது. இதை முடித்து விட்டு சென்னை திரும்பிய படக்குழுவினர், அடுத்தக் கட்ட படப்பிடிப்பை சென்னையில் முடித்தனர். இரண்டாம் கட்ட படபிடிப்பை முடித்துவிட்டு கடந்த சில நாட்களாக ஓய்வில் இருந்த நடிகர் விஜய், தற்போது அடுத்தக்கட்ட படப்பிடிப்பிற்கு தயாராகி உள்ளார். அதன்படி தற்போது பீஸ்ட் படத்தின் மூன்றாம் கட்ட படப்பிடிப்பு துவங்கியுள்ளது. இந்த மூன்றாம் கட்ட படப்பிடிப்பு சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நடைபெற உள்ளது.

    இதையறிந்த விஜய் ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்தில் உள்ளனர்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Shalini C
    First published: