Home /News /entertainment /

சாதனை விலைக்கு விற்கப்பட்ட விஜய்யின் பீஸ்ட் வெளிநாட்டு உரிமை!

சாதனை விலைக்கு விற்கப்பட்ட விஜய்யின் பீஸ்ட் வெளிநாட்டு உரிமை!

அரபிக் குத்து பாடல்

அரபிக் குத்து பாடல்

கோலமாவு கோகிலா, டாக்டர் படங்களை இயக்கிய நெல்சன் திலீப்குமார் பீஸ்டை இயக்கியிருப்பது படத்துக்கு எக்ஸ்ட்ரா மைலேஜாக அமைந்துள்ளது.

படத்துக்குப் படம் விஜய்யின் மார்க்கெட் உயர்ந்து வருகிறது. ரஜினிக்கு அடுத்து கலெக்ஷன் கிங் விஜய் தான் என்பதை பீஸ்ட் படத்தின் வியாபாரமும் உறுதி செய்துள்ளது.

சன் பிக்சர்ஸ் தயாரித்திருக்கும் பீஸ்ட் படம் ஏப்ரலில் வெளியாகிறது. தேதி இன்னும் முடிவாகவில்லை. அனேகமாக ஏப்ரல் 13 படம் வெளியாகலாம் என்கின்றன தகவல்கள். இதுவரை பீஸ்டின் இரு பாடல்கள் வெளியாகி மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளன. முதல் பாடல் அரபிக்குத்து 200 மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளை யூடியூபில் பெற்றுள்ளது. இதுவொரு சாதனை. இரண்டாவது பாடலும் யூடியூப் பார்வையில் சாதனை படைத்து வருகிறது.

18 வருஷம் கழிச்சும் அதே அன்போட அஜித் சார்... அம்பானி சங்கர் நெகிழ்ச்சி!

கோலமாவு கோகிலா, டாக்டர் படங்களை இயக்கிய நெல்சன் திலீப்குமார் பீஸ்டை இயக்கியிருப்பது படத்துக்கு எக்ஸ்ட்ரா மைலேஜாக அமைந்துள்ளது. பீஸ்டின் வெளிநாடு திரையரங்கு விநியோக உரிமை சுமார் 38 கோடிகளுக்கு விலை போயுள்ளது. விஜய் படங்களில் இதுவே அதிகபட்சமாகும். ரஜினி, ஷங்கர் போன்ற இயக்குனருடன் சேரும்போது மட்டுமே இந்த விற்பனையை அவரது படம் தாண்டிச் செல்லும். பீஸ்டின் கேரளா, ஆந்திரா, கர்நாடகா உரிமைகளும் இதுபோன்று சாதனை விலைக்கு வாங்கப்பட சாத்தியமுள்ளது.

இசைஞானி இளையராஜா பாணியை பின்பற்றும் அனிருத்!

பீஸ்டில் விஜய்யுடன் பூஜா ஹெக்டே, செல்வராகவன், யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லி, மலையாள நடிகர் ஷைன் டாம் சாக்கோ உள்பட பலர் நடித்துள்ளனர். அனிருத் இசையமைத்துள்ளார். விரைவில் பீஸ்ட் படத்தின் கேரள, ஆந்திரா, கர்நாடக விநியோக உரிமைகளின் விவரங்களும் தெரிய வரலாம்.



உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
Published by:Shalini C
First published:

Tags: Actor Vijay, Sun pictures

அடுத்த செய்தி