Beast: சர்ச்சையை கிளப்பிய விஜய்யின் பீஸ்ட் ஷாட் கன்

பீஸ்ட் செகண்ட் லுக்

உலகில் யாராக இருந்தாலும் எந்தத் துப்பாக்கியையும் கைகளால்தான் பிடித்தாக வேண்டும்.

  • Share this:
    துப்பாக்கி என பொத்தம் பொதுவாக சொல்வது தவறு. ஷாட் கன் (shot gun) என்பதே சரி. நாம் பயன்படுத்தும் துப்பாக்கி என்ற சொல்லுக்குள் ரிவால்வர், பிஸ்டல், ஷாட் கன் தொடங்கி ஏகே 47 வரை பல வகைககள் உள்ளன. பீஸ்ட் பர்ஸ்ட் லுக்கில் விஜய் கையில் வைத்திருப்பது ஷாட் கன். அதுதான் இப்போது சர்ச்சையாகியிருக்கிறது.

    நேற்று பீஸ்ட் முதல் பார்வை வெளியானதும், கூடவே சர்ச்சையும் கிளம்பியது. எனிமி படத்தில் விஷால் துப்பாக்கியுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு, பீஸ்ட் காப்பி என்றனர். இதேபோல் பல ஹாலிவுட் படங்களின் புகைப்படங்களும் பகிரப்பட்டன. உலகில் யாராக இருந்தாலும் எந்தத் துப்பாக்கியையும் கைகளால்தான் பிடித்தாக வேண்டும். ஒன்று நேராக இல்லை உயர்த்தி இல்லை தரையை நோக்கி தாழ்த்தி. இதில் காப்பி, டீ என்பதெல்லாம் எங்கிருக்கிறது?

    சரி, நம் விஷயத்துக்கு வருவோம். பீஸ்ட் முதல் பார்வையில் விஜய் கையில் வைத்திருப்பது ஷாட் கன். பொதுவாக அருகில் இருக்கும் டார்கெட்டை சுட ஷாட் கன் பயன்படும். தொலைதூரத்தில் உள்ள டார்கெட்டை சுடும் sniper-களில் தான் ஸ்கோப் பயன்படுத்துவார்கள். சாதா கண்ணால் பார்க்க முடியாத தூரத்தில் உள்ள டார்கெட்டை ஸ்கேப்பின் உதவியால் துல்லியமாகப் பார்த்து சுட முடியும். ஆக, குறுகிய தூர டார்கெட்டை சுடும் ஷாட் கன்னில் எதற்கு ஸ்கோப் என்று சிலர் கேள்வி கேட்டனர்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    ரெமிங்டன் 870 வகை ஷாட் கன்களில் ஸ்கோப் பொருத்தும் வசதி உண்டு. பல ஷாட் கன்கள் ஸ்கோப் பொருத்தப்பட்டே கடைகளில் கிடைக்கின்றன (இங்கல்ல வெளிநாட்டில்). பீட்ஸில் விஜய் பயன்படுத்தியிருப்பது ஸ்கோப் பொருத்தப்பட்ட, AGM 003 Pump Action ஷாட் கன்னின் நவீன மாடல் (AGM 003 Pump Action Shotgun short 0.84 Joule - BK) என்கிறார்கள் இந்தத்துறையின் வல்லுநர்கள்.

    ஒரு காலத்தில் கை துப்பாக்கியில் குண்டு மாற்றாமல் ஒரே நேரத்தில் ஐம்பது பேரை விஜயகாந்த் சுட்டு வீழ்த்தினார். யாரும் கேள்வியே கேட்டதில்லை. அந்தப் பொற்காலத்தை இணையம் களவாடிவிட்டது.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Shalini C
    First published: