Home /News /entertainment /

Jollyo Gymkhana: விஜய் குரலில் பீஸ்ட் செகண்ட் சிங்கிள் - உற்சாகத்தில் ரசிகர்கள்!

Jollyo Gymkhana: விஜய் குரலில் பீஸ்ட் செகண்ட் சிங்கிள் - உற்சாகத்தில் ரசிகர்கள்!

பீஸ்ட் செகண்ட் சிங்கிள்

பீஸ்ட் செகண்ட் சிங்கிள்

இரண்டாவது சிங்கிளான ஜாலியோ ஜிம்கானா பாடல் வரும் 19-ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் உற்சாகம் தரும் விஷயம் என்னவென்றால், இந்தப் பாடலை நடிகர் விஜய் பாடியுள்ளார். 

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
    நடிகர் விஜய் நடித்துள்ள பீஸ்ட் படத்தின் இரண்டாவது சிங்கிளான ஜாலியோ ஜிம்கானா பாடல் வரும் 19-ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

    நடிகர் விஜய்யின் 65-வது படமான ’பீஸ்ட்’ திரைப்படத்தை நெல்சன் திலீப் குமார் இயக்கியுள்ளார். படத்தில் கதாநாயகியாக பூஜா ஹெக்டே நடித்துள்ளார். அனிருத் இசையமைக்கும் இப்படத்தில் அபர்ணா தாஸ், யோகிபாபு உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். விஜய்யின் ’சர்கார்’ படத்தைத் தொடர்ந்து இந்தப் படத்தையும் சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ளது.

    தளபதி 65 படம் என்றழைக்கப்பட்டு வந்த பீஸ்ட் படத்தின் டைட்டிலும், ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரும் கடந்த ஜூன் மாதம் விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு வெளியிடப்பட்டது. இதையடுத்து பீஸ்ட் படத்தின் 100-வது நாள் படப்பிடிப்பில் எடுக்கப்பட்ட புகைப்படம் மற்றும் இறுதி நாள் படப்பிடிப்பில் எடுக்கப்பட்ட புகைப்படம் ஆகியவை வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலானது. தொடர்ந்து பீஸ்ட் படத்தின் வேறு அப்டேட்டுகளுக்காக காத்திருந்தனர் ரசிகர்கள்.

    கடினமான தருணத்தில் ஐஸ்வர்யா ரஜினிகாந்துக்கு நடந்த நல்ல விஷயம்!

    பின்னர் காதலர் தினத்தை முன்னிட்டு பீஸ்ட் படத்தின் முதல் பாடலான ‘அரபிக் குத்து’ லிரிக் வீடியோ வெளியானது. அதன் ப்ரோமோவில் இயக்குநர் நெல்சன், இசையமைப்பாளர் அனிருத் மற்றும் நடிகரும், அரபிக் குத்து பாடலாசிரியரான சிவகார்த்திகேயனும் இடம் பெற்றிருந்தனர். அவர்களுடன் ஃபோனில் பேசியிருந்தார் விஜய். இதைக்கேட்டு உற்சாகமானார்கள் ரசிகர்கள். ஹலமதி ஹபீபோ எனத் தொடங்கும் அரபிக் குத்து பாடலை அனிருத்தும், ஜோனிடா காந்தியும் இணைந்து பாடியிருந்தனர். இந்தப் பாடல் தற்போது யூ-ட்யூபில் 182 மில்லியன் பார்வைகளைக் கடந்துள்ளது.



    தனுஷின் ட்வீட்டை லைக் செய்த ஐஸ்வர்யா ரஜினிகாந்த்! மீண்டும் இணைய க்ரீன் சிக்னல்?

    இந்நிலையில் தற்போது பீஸ்ட் படத்தின் முக்கிய அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது பீஸ்ட் படத்தின் இரண்டாவது சிங்கிளான ஜாலியோ ஜிம்கானா பாடல் வரும் 19-ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் உற்சாகம் தரும் விஷயம் என்னவென்றால், இந்தப் பாடலை நடிகர் விஜய் பாடியுள்ளார்.



    இந்தப் பாடலின் ப்ரோமோ வீடியோவையும் சன் பிக்சர்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது. அதில் விஜய், நெல்சன், அனிருத், பூஜா ஹெக்டே உள்ளிட்டவர்கள் இடம்பெற்றுள்ளனர். ஸ்டைலிஷான தோற்றத்தில் தனது மெல்லிய குரலால் பாடுகிறார் விஜய். பீஸ்ட் படத்தின் 100-வது நாள் படப்பிடிப்பில் எடுக்கப்பட்ட புகைப்படம், இந்தப் பாடல் படப்பிடிப்பின் போது எடுக்கப்பட்டது தான் என்பதும் இதில் உறுதியாகியிருக்கிறது.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Shalini C
    First published:

    Tags: Beast, Sun pictures, Thalapathy vijay

    அடுத்த செய்தி